பக்கம்:இந்தியா எங்கே.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

இந்தியா எங்கே?


முப்பது ஆண்டுகளாக நீங்கள் இரக்கமின்றி வேண்டு மென்றே அழித்துப் பாழாக்கிவிட்ட தேசபக்தியின் மீது ஆணையிட்டுக் கூறுகிறோம். எங்களிடம் எஞ்சியிருப்ப தெல்லாம் எங்கள் உயிரும் தேசபக்தியும் தன்மானமும் தான்.

அதை நாங்கள் உங்களைப்போல் பட்டம் பதவி களுக்காக அடகு வைக்கவில்லை. கட்சி அரசியல் சூழ்ச்சி களுக்காக அந்த அரிய பொருளை விற்று விடவில்லை. தேசத்துக்கு வந்துவிட்ட ஆபத்தைப் பற்றி நீங்கள் சொல்லும் எச்சரிக்கை எங்களுக்கு நன்றாகப் புரிகிறது.

ஆனால் இந்நாட்டு ஏழை மகன் கேட்கிறான்:

“தேசத்தை எதற்காக யாருக்காக காப்பாற்ற வேண்டும்? இந்த நாட்டின் அரசியலைப் பயன்படுத்தி, கொள்ளை லாபமடித்து, தங்கள் சுயநல பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்ளும், ஒரு சிலர் நன்றாக வாழவா நாங்கள் இந்தத் தேசத்தைக் காக்க வேண்டும்?” என்று, வாழ்விலே ஒரு பலனையும் அனுபவிக்காத இந்த நாட்டின் தரித்திர நாராயணன் கேட்கிறான்!

சுதந்திர இந்தியாவில் ஒருவித சிறுவாய்ப்பையும் பெறாத வாலிபன். நன்கு படித்தும், வேலை கிடைக்காத இளைஞன், வேலை கிடைத்தும் சரியான கூலி கிடைக்கப் பெறாத அபாக்யசாலி, கூலி கிடைத்தும் அன்றாட அடிப்படைத் தேவைக்கு உரிய சாமான்களையே வாங்க முடியாமல் கடனிலே அவதிப்படும் இந்த நாட்டு ஏழை மகன் கேட்கிறான்.

“தேசத்தைக் காக்கும் சக்தி எங்களிடம் எங்கே இருக்கிறது? எங்களுக்கு இருக்க வேண்டிய ஆற்றலையெல்லாம் இந்த நாட்டின் அரசியல் கட்சிகளல்லவா உறிஞ்சிவிட்டன! இந்த நாட்டில் ஜனநாயகம் எப்படி வாழும்? ஜனநாயகத்தின் சின்னமான ஒட்டுரிமையை பண நாயகர்கள், பத்து ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கி விடுகிறார்களே! விற்கும் நிலையில் மக்களை வைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/12&oldid=983037" இலிருந்து மீள்விக்கப்பட்டது