பக்கம்:இந்தியா எங்கே.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

பெண் :

«алт6&r

பெண் :

வான்

பெண் :

பெண் :

நம் தாய்

இந்தாருங்கள். இதை அருந்துங்கள் பசியும், களைப்பும் மாறும். விரைவில் யாராவது வந்து விடப் போகிறார்கள். (வயிறா உண்டு ஆ! மயக்கம் தெளிந்தது. அம்மா போதும். எழுந்துவிடப் போகிறான். இவன் மயக்கம் தெளிய வெகுநேரமாகும் அதற்குள் தங்களைத் தப்புவிக்க வேண்டியது என் கடமை. என் பொருட்டு நேற்று பரிந்து வந்ததாலல்லவா தங்களுக்கு இவ்வளவு கொடுர மான தண்டனை? நாம் தான் அடிமைகளாகவே வாழவேண்டுமென்று கடவுள் பிறப்பித்து விட்டான். அந்த விதியிலிருந்து இந்த ஜென்மத் தில் மீளப்போவதில்லை. வீனில் ஏன் தங்கள் உடம்பைப் புண்ணாக்கிக் கொள்ளவேண்டும். உடலைப் புண்ணாகாமல் காப்பாற்றவா! பெண்ணே! அழுகி நாற்றமெடுக்கும் நம்மக்களின் மனப் புண்ணை ஆற்றமுடியுமென்ற நம்பிக்கை என் ஒவ்வொரு மூச்சிலும் ஓயாமல் ஊசலாடு கிறது. பாவம்! நீ பெண்ணாதலால் என் பரிதாபத்தைக் கண்டு பயப்படுகிறாய். அஞ்சாதே! இந்த அரக்கர்கள் என்னை அணு அணுவாகக் கூறுபோட்டு வெட்டலாம். என் உயிரையும் போக்கலாம். ஆனால், அசையாத உறுதி வெறியை, உரிமை நெருப்பை அணைக்கவே முடியாது. நீ மட்டும் முடிந்தவரை பாதுகாப். போடு இருந்து உதவு. அதுவே போதும். கட்டுகளை அறுத்துவிடுகிறேன். தாங்கள் ஏன்

எங்கேனும் காட்டுப்புறமாக ஓடிவிடக்கூட்ாது?

தன்னல விடுதலையை வேண்டும் கோழை யல்லவா காட்டுக்குள் மறைந்து கண்ணை மூடிக் கொள்ள வேண்டும்! ‘. . . - - தாங்கள் அங்கிருந்தே விடுதலைக்குப் பாடுபட முடியாதா? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/124&oldid=537687" இலிருந்து மீள்விக்கப்பட்டது