பக்கம்:இந்தியா எங்கே.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 123

வான்

பெண்

வான்

பெண் :

வான்

சகோதரி காட்டிலுள்ள மிருகங்களும் தாவரங்

களும் விடுதலையோடே இருக்கின்றன. நாட்டில்

சீரழியும் நம்மவர் மத்தியிலேயே இருந்து அவர் களின் விடுதலைக்குப் பாடுபடவே துணிந்து விட்டேன். - -

இயலாத காரியம். தாங்கள் தப்பிப் போகத்தான் வேண்டும். இது என் வேண்டுகோள். சகோதரி, துரத்திவரும் நாகத்துக்குத் தப்பி நச்சுப்பொய்கையில் குதிக்கச் சொல்லுகிறாய். நான் தப்பி ஓடி எங்கே போவது அம்மா? இச் சிறு சிறையினின்று தப்பினால் நாற்புறமும் ஆழ மான சமுத்திரம். அதையும் தாண்டிச் சென்றால், மனிதத் தன்மையற்ற நாடுகள். அடைக்கலம் தர அங்கு ஆட்களில்லை. அன்பு நாட்டுக்குச் செல்வோமென்றால், காட்டிக் கொடுக்கும் லஞ்சப் பேய்கள் எங்கும் தாண்டவமாடி என்னை வளைத்து மீண்டும் இந்தப் பாழ் நரகத்துக்கே அனுப்பிவிடும் என்பதில் சந்தேகமே இல்லை. நம் நாட்டின் அடிமை வியாபாரி முன்னிலும் பதின்மடங்கு அதிகமாக தன் வியாபாரத்தைப் பெருக்கிக் பெட்டியை நிரப்புகிறான். நீ அஞ்சாதே! - அய்யோ! இந்தப் பேய்விதியை விலக்கவே முடியாதா அண்ணா? -

முடியும் விதியை வெற்றிகொள்ள முடியும் என்று என் மனத் துணிவு அடிக்கடியும் பேசுகிறது. அந்த நாள் வெகு அருகில் உள்ளதையும் ஏதோ ஒரு சக்தி எனக்குச் சொல்லிக்கொண்டே யிருக்கிறது. என்றாவது ஒரு நாள் விதியை வெல்லத்தான் போகிறோம். சுயநல மிருக நிலையில் திரியும் இந்த மனித சமூகம் உயர் நிலையடைவதை நம் கண்கொண்டே பார்க்க முடியுமென்று முழங்கி முரசொலி செய்யும் என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/125&oldid=537688" இலிருந்து மீள்விக்கப்பட்டது