பக்கம்:இந்தியா எங்கே.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.டி. சுந்தரம்

11




விட்டீர்களே! சுதந்திரத்தால் வந்த மனித உரிமையான வாக்குரிமையை, கேவலம் பத்து ரூபாய்க்கு விலை போட்டு வாங்கும் அரசியல்வாதிகளின் ஆதிக்கத்திற்கு இங்கு இடம் கொடுத்துவிட்ட பிறகு, சோஷலிஸ் ஜனநாயகத்தைப் பற்றிப் பேசி என்ன பயன்” என்று விரக்தியடைந்த, வாழ்க்கையில் தோல்வியடைந்த, பொருளாதார ஏற்றத்தாழ்வால் சலிப் படைந்த, இந்த நாட்டுமக்கள் கேட்கும் அவலக் குரல் நம் காதிலே கசப்பாக விழுகிறது!

இனிமேல் இந்த நாட்டை அழிக்க எவரும் துப்பாக்கியைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இங்கே வேலையில்லாமல் வறுமையில் வாடும் வாலிபர் களையே தங்களுடைய படைகளாகப் பயன்படுத்திக் கொள்ளும் அளவிற்கு துணிச்சல் வந்து விட்டது. இந்த நிலையிலும் இந்தியாவில் இருக்க வேண்டிய அளவுக்கு தேசபக்தி இல்லை! இதற்குக் காரணம் என்ன?

சுதந்திரம் வந்தவுடனே, அதிகாரத்தைப் பங்கு போட்டுக் கொள்வதில் அக்கறை கொண்ட கட்சிக்காரர்கள், இந்த நாட்டில் மக்களுக்கு தேசபக்தியைப் போதிக்கும் கடமையைச் செய்ய அறவே மறந்து விட்டார்கள் மறுத்தும் விட்டார்கள். இவர்கள் மறந்து போன கடமையைச் செய்ய வந்த சில தேசபக்தர்களையும் எள்ளி நகையாடினார்கள். அவரவர்களின் கட்சி அரசியல் தேர்தல் திருட்டுத்தனந் தான் அவர்களுக்கு பெரிதாகத் தெரிந்ததே தவிர, இந்த நாட்டைக் காக்க வேண்டிய வாலிப உள்ளங்களில், நீக்கமற நிறைந்திருக்க வேண்டிய நாட்டன்பை நல்லதொரு துணிச்சலை, எதற்கும் அஞ்சாத வீரத்தை ஊட்டத் தவறி விட்டனர்.

மற்ற நாடுகளிலிருந்து வரும் வாலிபர்களைக் கண்டு நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்று கேட்டால், “நான் ரஷ்யன், தேசபக்த வீரப் போரில் நாசிகளை எதிர்த்து வெற்றி பெற்றோம் நான் அமெரிக்கன், நான் ஆங்கிலேயன், நான் பிரஞ்சுக்காரன், நான் கனடியன், நான் எகிப்தியன், நான் ஆப்பிரிக்காக்காரன்” என்று தலை நிமிர்த்தி நெஞ்சு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/13&oldid=983065" இலிருந்து மீள்விக்கப்பட்டது