பக்கம்:இந்தியா எங்கே.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 நம் தாய்

பட 2 : என்னா சாமி! பூமியிலே இருந்து வடிகட்டின இந்த மஞ்சள் மண்ணாங்கட்டிக்கு, தங்கம்னு ஒரு புதுப்பேர் கொடுத்து, தெய்வம் கிய்வம்.கிறீங் களே! எனக்கும் சிரிப்பு வருது சாமி.

பட 1 : டேய் டேய்! சாமி சொல்றது சத்தியமான பேச்சு. நாலுபேத்துக்கு மேலே நாமும் இருக்கணும்னா இது இல்லாட்டி முடியுமா? இதைப்பத்தி என் பாட்டி சொல்லித் தந்த பாட்டு நெனவு வருது.

பொன் ; மற்றொரு ஆளுடன் உள்ளே சென்று, அங்கு வண்டியில் வைத்திருந்த மற்ற பைகளையும் கொண்டுவரும் பணியிலிடுபடும்போது, முதல் ஒடக்காரன் பாடுகிறான்.

பாட்டு -

பணமென்னுந் தோணியிலே - அகிலேசா

பதவியென்னும் பாய்விரிப்போம் - ஆமாண்டா

பொய்யென்னுந்துடுப்பாலே நீந்திடுவோம்

பெருமையென்னும் கடல்தாண்டிப் போயிடலாம் - கேட்டியா

நீதியெனும் முதலைவரும் அப்போது

சூழ்ச்சியெனும் ஈட்டியாலே தீத்துடு

சோதனைத்திமிங்கிலமே வந்தாலும்

தந்திரமாம் வோட்டுப்போட்டு சுட்டுடு - கேட்டுக்கோ

உண்மையென்னும் பலபாறை - அண்ணாத்தே உன்வழியைமறிச்சாலும் அஞ்சாதே

தன்னலமாம் காத்தோட - சேந்துக்கோ

செல்வமென்னும் கரைநோக்கித்திருப்பிக்கோ

ஆமாம் சுக்கான் திருப்பிக்கோ.

இதைக் கவனத்துக்கொண்டிருந்த பொன் மேனி)

பொன் : ஆகா! அருமையான பாட்டு. யாராப்பா

பாடினா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/132&oldid=537695" இலிருந்து மீள்விக்கப்பட்டது