பக்கம்:இந்தியா எங்கே.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

ஞான s

ஞான :

நம் தாய்

ஆனால், நம் சபையின் சட்டம் அப்படிச் சொல்லவில்லையே? மீனைப்போல் நழுவப் பார்க்கிறாயே?

விவாகம் சட்டத்துக்காக அல்ல. வாழப்போகும் சந்தோச இல்லறத்துக்கு. மாமா! நான் உலகப் பிரயாணத்தை முடித்த பின்னர்தான், திருமணம்

செய்துகொள்ள வேண்டுமென்று முடிவாக

எண்ணியிருக்கிறேன். உலகப்பிரயாணமா! உன் துணைவியோடும், இளவரசன் என்ற பதவியோடும் போனால், தேசாதிபதிகளெல்லாம் உன்னை இன்னும் நன்றாகத் தெரிந்து கொள்ளுவார்கள் ஞானம்! என்ன! துணைவியோடு உலகப் பிரயாணமா? விலங்கோடு சமுத்திரத்தில் நீந்தப் பழகச் சொல்லுகிறீர்களே? நீ நினைப்பது தவறு. இனிமைக் கப்பலில் இன்பப் பிரயாணம் செய்யச் சொல்லுகிறேன். வாழ்க்கையை அளந்து பார்க்கவேண்டுமென்ற ஆசை கொண்டுள்ளேன். அதை நாசமாக்கும் முயற்சி இது. எந்த அடிக்கோலால் வாழ்க்கையின் ஆழத்தை அளப்பதாக உத்தேசம்? உறுதியான எண்ணம் ஒன்றே போதும். உடைப் பில்லாத தன்னம்பிக்கையாலும், உலகறிவாலும் வாழ்வைத் தணிக்கை செய்துவிடலாம். தணிக்கை செய்தபின்?

தராசு முள்போல் ஆட்சியை ஏற்று நடத்துவேன். நீ நினைப்பதுபோல், அவ்வளவு சுலபமான நிலையில், நம் தீவின் ஆட்சிச் சட்டம் அமைய வில்லையே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/142&oldid=537706" இலிருந்து மீள்விக்கப்பட்டது