பக்கம்:இந்தியா எங்கே.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 141

ஞான

LDos

ஞான

ஞான

மன்

சட்டம், பட்டம், பதவி இவைகள் சந்தர்ப்ப வாதிகளின் சிருட்டிகள். கால வேகத்திலே கரைந்து போகும் களிமண் வீடுகள். ஞானதேவா! நீ இளங்குருந்து, பனித்தீவின் நிர்வாகமென்னும் சூரியனைக் காணமுடியாமல் வாடிப்போகிறாய். நீ பயப்படாமல் திருமணத் தோடு தந்தை தரவிருக்கும் பட்டத்தையும் ஏற்றுக் கொள். நான் தான் உனது வலது கைபோல் உதவி செய்யத் தயாராயிருக்கிறேன். உ.ம். நான் போகிறேன். அங்கு என் அரண்மனையில் சதா என் குமரி இன்பக்கொடி உன்னைப்பற்றியே எண்ணி எண்ணி கவலைப்படுகிறாள். தங்கள் குமாரி என்னைப்பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியம்? நான் குறைவற்ற சுகத்தோடு தானே இருக்கிறேன். அவசியமா? விவாகம் ஆன மறுநாள், விவரமாகத் தெரிந்துவிடப் போகிறது. நான் வரட்டுமா? ஞானதேவா! பனித்தீவின் அரசியல் பார்க்கும் போது சிக்கலாகத்தான் தோன்றும். பட்டம் பெற்று, பதவியில் அமர்ந்து விட்டால், பிறகு எல்லாம் வெகு சுலபம். நான் மட்டுமென்ன, என் குமாரி இன்பக்கொடி பெண்ணாயிருந்தாலும், ஒரு பெரிய ராஜதந்திரியப்பா. உனக்கேற்ற துணைவி. சகலகலா சுந்தரி, சந்திரவதனி. இவ்வளவு சிரமம் எடுத்துக்கொள்ளுவது தவறு. வாங்க விரும்பும் பொருளுக்கு அதிகமான விலை தர முன்வருகிறீர் என நினைக்கிறேன். ஆம். உன் போன்ற ஞான மாணிக்கத்தை மரு மகனாகப் பெற வேண்டுமானால், விலையைப் பற்றி யோசித்தால் முடியுமா? நான் எதிர் பார்ப்ப தெல்லாம் உங்கள் இன்ப வாழ்வு. அவ்வளவுதான். எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் நானறியேன் ஞான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/143&oldid=537707" இலிருந்து மீள்விக்கப்பட்டது