பக்கம்:இந்தியா எங்கே.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

篮48

f

நம் தாய்

என் வாழ்வின் கடைசி ஆசை. அதுவும் நிறை வேறி விட்டது. இனி நான் பாக்கியவான். அப்பா!! உண்மையில் மனிதன் இன்பம் பெறுவதே இல்லை. இருந்தாலும் இன்பக் கானலைக் கண்டு உற்சாகமடைந்து விடுகிறான். என்னவோ சொல்லுகிறாயே. இல்லை. மன்னர் இன்பவாகனர் ஒரு அசகாய சூரராச்சே என்றுதான். அதுவா. மகளே! எல்லாவற்றிற்கும் ஏற்ற உபாயத்தைத் தயாரித்தே வைத்துள்ளேன்.

அப்படியானால் அந்த உபாயங்களை நானும் உன்னைப் பொறுத்தவரையில் அமுலுக்குக் கொண்டு வர முயற்சிக்கிறேன் அப்பா. நான் துரங்கப் போகிறேன்.

சரி. இதுவே போதும். பரமதிருப்தி. ஆகா! நல் விதியே! உனக்காகவே நீ வேலை செய்.

கதிர் - 2

காலம் நள்ளிரவு இடம் : அடிமைகளின் பாதுகாப்பு இடம்

(அடிமைகளின் முன்னிலையில் வானழகனின் ஆவேசமான பிரசங்கம். தணிவான குரலில்)

வான்

பாட்டு

தோழர்களே! காவலர்கள் எல்லோரும் மது

மயக்கத்திலிருக்கும்போதே உங்களுக்குச் சில

உண்மைகளைக் கூறுகிறேன் கேளுங்கள்.

விடுதலை நாளைநோக்கி, வினில் பஞ்சாங்க

ஏடுகளை இனிமேல், எண்ணும் பணியில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/150&oldid=537715" இலிருந்து மீள்விக்கப்பட்டது