பக்கம்:இந்தியா எங்கே.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 149

பீடைச் சிறையிதுவே! பொலிவுறு கோயில்என்

வாடா வீரர்காள்! வணங்கும் தெய்வங்காள்! மாண்டநம் அன்பர்களின், மனப்புண் அதனுன்ளே

தாண்டவ மாடியதே, தீரா உரிமைவெறி? கூண்டில் மறைந்ததுவா? குன்றித் தேய்ந்ததுவா?

ஆண்மையின் மீதானை, அதற்கோர் அசைவில்லை. உடல்செத்தால் சாகட்டும், உண்மைத் தவக்காட்சி

அடைந்திடப் பிறந்திட்டோம், அதைநீர் மறவாதீர் உடைந்தஉம் உள்ளங்கள், உணர்ச்சியின் உச்சிமலை

அடைந்திடும் பலம்பெறுக, அன்பின் தோழர்காள்.

முன்பிறந்தோர் செய்துவிட்ட, மூத்தபெரும் தவறதனால் w என்னருமை நாட்டுரிமை, எங்கிருந்தோ வந்தவராய்

கன்னற் பழம்போலக் கவர்ந்து விட்டார் களைப்பாறி

மின்வெட்டும் மேனியெல்லாம், மெத்தையெனும்

கொழுப்புற்றார்.

அன்னவரின் அக்ரமத்தை, ஆளும் நிறவெறியை,

எண்ணத்திலும் இல்லா, நெறியைச் செயல்வேண்டும்.

மன்னன் மனமற்ற, மிருகமும் இல்லைநாம்

தின்னுவ தின்னதெனத் தெரியா விலங்கினமோ?

அன்னம் புசிப்பதனால், ஆகியஉடல் இதனுள்

வண்ணச் சுடர்மூச்சு, உயிராய் உலவுவதால்

கண்ணிய வாழ்வுற்றோம், கருதப் பயின்றிட்டோம்

அண்ணன் ஆயிடினும், அடிமைப் படுத்தவளின்

அன்னவன் நெஞ்சினிலே, அறையும் உரிமைவெறி:

பின்னர் பிறந்ததனால், பெரியோன் இளையவனைச்

சின்னப் பயல்தானே, இவனைநாம் ஆள்வோம்!

என்னலும்கொன்றிடவே, எழுமவ் வுரிமைவெறி

அந்நியர் விலங்கோ, அடங்கிடும் ஆகாகா! *

புண்ணைக் கொத்தவரும், பருந்தைக் கும்பிடவோ!

வெண்ணை தின்னவரும், பூனையை வாழ்த்துவதோ?

கண்ணைக் குறிபார்க்கும், பாம்பைப் கொஞ்சுவதோ?,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/151&oldid=537716" இலிருந்து மீள்விக்கப்பட்டது