பக்கம்:இந்தியா எங்கே.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 15 1.

வான்

வில்லி

வான்

வில்லி

ситайт

இன்ப

வான்

வில்வி

வான்

திருப்புக் காட்சி

(சோலையில் இன்பக்கொடி நிற்கிறாள்)

யாரது இந்த அம்மையா என்னைச் சந்திக்க வேண்டும். இவர்கள்.

ஆம். மகாப்ரபு. மன்மத சகாயரின் மகள். இன்பக் கொடி அம்மா இவர்தான். ஆம் நான் தான் உங்கள் பிரபுத்வக் கசைக் கயிற்றில் கட்டுண்டு, இரத்தம் கக்கும் அடிமை. பதறாதீர்கள் அண்ணா! அவர்கள் நம்மீது இரக்க முள்ளவர்கள். இரக்கமா! இவர்கள் இரத்த அணுவின் ஆயிரத் தில் ஒரு பங்கான பகுதியில் கூட, காணக் கூடாத குணமல்லவா அது.

அன்பின் களஞ்சியமே!

யார் நானா முழுத்தவறு என்னிடம் அன்பும் இல்லை. நான் ஒரு கொதிக்கும் குரூரப் பைசாச மாக மாறி நாட்கள் பலவாகிவிட்டன. சென்று போன நாட்களில் என்னைவிட்டு நீங்காதிருந்த அந்த அன்பென்னும் வழுக்குப் பாறையில் மீண்டும் ஒருமுறை சருக்கி விழமாட்டேன். ஏது இங்கு வந்தது? ஏதாவது அவசரத் தொண்டுக்காக ஆளைப் பொறுக்க வந்தீர்களா? அண்ணா! நிதானமாய்ப் பேசுங்கள். தாமரையின் மீது நெருப்பைக் கொட்டாதீர்கள். அன்பே உருவான ஆரணங்கை அழச் செய்யாதீர்கள்.

சகோதரி! இவர்கள் இதயத்திலிருந்து அன்பை எதிர்பார்க்கும் உன்னிலை மிகவும் பரிதாபத்துக்கு உரியது. கற்பாறையின் மீது கரும்பைப் பயிர் செய்ய முயற்சிப்பது பைத்தியக் காரத்தனமம்மா. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/153&oldid=537718" இலிருந்து மீள்விக்கப்பட்டது