பக்கம்:இந்தியா எங்கே.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

இன்ப

வான்

வில்வி

வான்

நம் தாய்

அம்மா! அவர் உள்ளம் கொந்தளிக்கும் இச் சமயத்தில், எனது திக்கற்ற நிலையைப் புரிந்து கொள்ளமுடியாது. புரியவைக்கும் அளவுக்கு அறிவும், திறமையும் எனக்கில்லை. அவர்மீது குற்றமில்லை. கமலத்தைக் கல்லாக்கும் எமது நாட்டின் பிரபுத்துவத்தை உங்கள் நிலையிலேயே நின்று மனதாரச் சபிக்கிறேன். அவர்களின் கொடுங்கோலின் கூர்மையை மழுங்கச் செய்யும், முதல் சம்மட்டி நானே என்பதை சமீப நாட் களில் நிரூபித்த பின்பு அவர் என்னை அறிந்தால் போதும். உங்கள் இரக்கத்தை நம்பிப்பிழைக்க வேண்டும் என்ற ஆசை எங்களுக்கில்லை அம்மணி, மனித இரக்கம் வெகு சீக்கிரம் தேய்ந்தொழியும் வியாதி என்பதை அறியாத முட்டாளிடம், இரக்கமான குரலில் பேசினால், நீங்கள் எண்ணியபடி எல்லாம் தலையை ஆட்டுவான். நான் அந்த தலையாட்டும் பொம்மையல்ல.

அண்ணலே இரக்கத்தின் பேரால் நான் தங்களுக்கு உபகாரம் செய்யமுடியும் என்ற இறுமாப்பு எனக்கில்லை. அன்பின் கடமையை ஆனவகையிலெல்லாம் செய்து எனது காணிக் கையைச் சமர்ப்பிக்கும் நன்னாள் கணந்தோறும் நெருங்குகிறது என்பதை மட்டும் பணிவுடன் தெரிவித்துவிட்டு விடைபெற்றுக் கொள்ளு கிறேன். அம்மா வில்லி வா போவோம்.

(நகருகிறாள்)

அண்ணா! உங்கள் ஆவேசத்தால், சத்தியமான சாந்தி உள்ளத்தை ரொம்பவும் நோகச் செய்து விட்டீர்கள்.

சகோதரி! என்போன்ற நோயாளியை இதைப்

போன்ற சுகவாசிகள் நெருங்கினால், நோய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/154&oldid=537719" இலிருந்து மீள்விக்கப்பட்டது