பக்கம்:இந்தியா எங்கே.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 155

ஞான

வான்

ಅTa

வான்

ஞான

வான்

ஞான

வான்

ஏன் ஆச்சரிய இருள், கண்ணையும் கருத்தையும் மூடுகிறதா?

இல்லை. காட்டாற்றின் கரை கடந்த வெள்ளம்

படிப்படியாகக் குறைவதுபோல், என் கட்டற்ற ஆவேசம் குறைய ஆரம்பித்திருக்கிறது.

ஆம் நம்புங்கள். நம்பாமல் கொந்தளிப்பதைவிட, நம்பி அமைதியை நிலைநாட்டுவது நல்லதல்லவா நண்பரே! நீண்ட இரவு கழிந்துவிட்டது. அதோ! வைகறை வேளையின் வருகையை அறிவித்து உதயதாரகை உவகையுடன் கீழ்வானில் மின்னு கிறது. - அதேபோல் உலகில் ஆதிக்க இருளைக் கரைக்கும் விடிவெள்ளியாக நீங்கள் விளங்குவீர் களானால், நான் ஒரு சிறு மலர் ப்ெறும் மகிழ்ச்சியைப் பெறத் தயங்கமாட்டேன்.

வானழகரே! ஒளியும் இருளும் மணம் புரிந்து கொள்ளும் கலியான மண்டபத்தைத்தான் சூரியோதயம் என்றழைக்கிறோம். அதேபோல் தாங்களும் சற்றுமுன் இங்கு வந்த இன்பக் கொடியும் மணம் புரியும் திருநாளைத்தான் சுதந்திர உதயம் என்று என் வாயார வாழ்த்தப் போகிறேன்.

நானே சிருட்டித்துக்கொண்ட குழப்பக் கடலி லிருந்து மீட்கவந்தவர் என்று உம்மை நம்ப ஆரம்பித்த மறுகணமே, குழப்ப நரகத்தில் தள்ளி மூச்சைத் திணற வைக்கிறீர்கள். வேண்டாம். வேறு செய்தி உண்டா?

மன்னிக்க வேண்டும். நெடுநாளைய சந்திப் பென்று நான் எண்ணியது தவறு போலிருக்கிறது.

அந்த சந்திப்புக்கும், என் அறிவுக்கும் துளிகூட

சம்பந்தமே இல்லை. . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/157&oldid=537722" இலிருந்து மீள்விக்கப்பட்டது