பக்கம்:இந்தியா எங்கே.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

இந்தியா எங்கே?


அனுபவிக்கிறாய். உலகமும் உன்னை பெருமையோடு பார்க்கிறது.

உனக்கும் உன் சந்ததியாருக்கும் ஒரு கெளரவத்தைத் தேடித் தந்திருக்கிறது சுதந்திரம், படிக்காத முட்டாளாய் படுத்துக் கிடந்த உன்னை படித்த மேதாவியாக்கி இருக்கிறது, நீ பெற்ற விடுதலை இருட்டிலே கிடந்த உன்னை வெளிச்சத்துக்கு அழைத்து வந்திருக்கிறது.

சட்டைக்காரனைக் கண்டு சலாம் போட்டுக் கொண்டிருந்த உனக்குச் சட்டபடி சமத்துவத்தை அளித்திருக்கிறது. தாழ்ந்தவன் பிள்ளை தாழ்ந்தவனாகத்தான் இருக்க வேண்டும், ஏழையின் குழந்தை ஏழ்மையில்தான் சாக வேண்டும், என்ற இருண்ட வழக்கத்தை மாற்றி, எல்லோரும் முன்னுக்கு வர ஒரு சமசந்தர்ப்பத்தைத் தந்தது.

“சுதந்திரமே வேண்டாம். என்றென்றும் வெள்ளைக் காரனின் அடிமைகளாகவே இருப்போம். பதவிக்காக துரைமார்களின் காலைப் பிடிப்போம்” என்று கூறிய மீளா அடிமைகள்கூட, விடுதலையின் பெருமையை உணர்ந்து வாழும்படிச் செய்தது. வாழ்த்தும்படி செய்தது. அது மட்டுமா? அவர்கள்கூட ஆட்சிப் பொறுப்பை ஏற்று உயர வழிவகுத்துத் தந்தது.

சுதந்திரத்துக்கு முன், வெளிநாட்டில் இந்தியன் என்றால் கூலி வேலை செய்யும் அடிமை, என்று தான் பொருள். தாம் பிறந்த பொன்னாட்டை விட்டு விட்டு ஒப்பந்தக் கூலிகளாக, கங்காணிகளின் அடிமைகளாக, முதலாளிகளுக்குக் கால் பிடிக்கும் அடைப்பக்காரர்களாக, தோட்ட வேலைக்காக உலகின் பற்பல தீவுகளுக்கும் சென்ற அவலத்தை இன்னும் வரலாறு மறந்து விடவில்லை. இப்போதும் ஆயிரக்கணக்கில் இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். ஆனால், அன்று போல் அடிமைகளாக அல்ல; கூனிக் குறுகிய கூலிகளாக அல்ல. அச்சத்தில் அழிந்த அகதிகளாக அல்ல. உணர்ச்சி இல்லாத பேடிகளாக அல்ல! வட்டி வாங்குபவர்களாக அல்ல!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/16&oldid=1401709" இலிருந்து மீள்விக்கப்பட்டது