பக்கம்:இந்தியா எங்கே.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i8O

பொன் :

வாணி :

நம் தாய்

ஒளிந்துள்ள குகை அடிமைகளும், உயிருக்குப் பயந்து ஓடி வந்தே ஆக வேண்டும். அப்போது கிடைப்பார்கள் மலை அழகிகள். அங்குள்ள முயல்களைப் போலவே குறுகுறுத்த விழிகள் கொண்ட அழகிகள். எப்படி யோசனை?

ஆகா! ஆகா. ஆகா. எப்படியும் நாம் தங்க மாளிகையில் உலாவ வேண்டும்.

திருப்புக் காட்சி (அடிமைகளைப் பிடிக்க வேண்டி, சந்தேகப்பட்ட குன்றின் குகையிடங்களையெல்லாம், பொன் மேனிராயனின் துப்பறியும் புவிகள் வெடி எழுப்பி உடைக்கும் கோரமான சப்தம் கேட்டு, சிவர் வெளியே வருகையில் பிடிபடுகிறார்கள். சிலர் மடிகிறார்கள். அதிர் வெடியும், அட்ட

காசமும் செய்யும் கொடிய சைத்தான்களின்

தாசவேவை/

திருப்புக் காட்சி

ஆம்! இனி மீள வகையில்லை. இத்தனை மாதங்களாக திரும்பாததால் வானழகன் வாழ்வு முடிந்தேயிருக்கவேண்டும். அன்றி பனித் தீவின் அடிமைக் கூட்டத்தில் தள்ளப்பட்டிருக்க வேண்டும். பகைவன் கையில் அகப்படாமல் கடந்த பதினெட்டு ஆண்டுகளாக காத்து வந்த என் இன்ப மகள் வேல்விழி இன்று பகைவர் கையில் பிடிபடும் கோரச் செயலைக் காண்பதை விட அவள் துங்கும்போதே வளர்த்த என் கரத்தாலேயே கொன்றுவிட்டு நானும் தற் கொலை செய்து கொள்வதே புனிதமான செயலாகும். ஆண்டவா! உன்னை நம்புபவருக்குத் தரும் கடைசிப் பரிசை எனக்கும் தந்து விட்டாயா? சரி. ஆம். மனமே! இந்த உன்னத மான முடிவிலிருந்து மாறி விடாதே. ஒடுகிறாள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/162&oldid=537728" இலிருந்து மீள்விக்கப்பட்டது