பக்கம்:இந்தியா எங்கே.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

இன்ப

இன்ப

மன்

நம் தாய்

ஆம் அப்பா: இட்டகட்டளையை நிறைவேற்ற வில்லை. அதைப் பற்றியே பேசிக்கொண்டி ருந்தேன். நீயா அடிமையுடன் சம்பாவிப்பது? கேவலம். அவர்களும் மனிதர்கள் தானே அப்பா.

மனித மிருகங்கள்.

இவ்வாறு செய்வதே வெறுப்பாயிருக்கிறதப்பா,

இன்பக்கொடி! இந்த அவதூறு நான் சகிக்க முடியாத ஒனறாகும.

சகிப்புத் தன்மையை வரவழைத்துக் கொள்ளுங்கள் அப்பா.

அடிமையிடம் பேசுவதையா?

பேசுவதை மாத்திரமல்ல. பாசமாகப் பழகுவதைக் கூடப் பொறுமையாக அனுமதிக்கத்தான் வேண்டும்.

என்ன பேசுகிறாய் நீ. வருங்கால ராணியின் பேச்சா இது?

வருங்கால ராணியா! ராஜாவாக ஞான தேவர் சம்மதிக்கும் நாள் வரட்டும். பிறகு, ராணி யாரென்பதை முடிவுகட்டலாம்.

ஆ என்ன சொன்னாய்? அவன் ஒரு சிறுவன். நீ என் பெண். உங்கள் சம்மதத்தைக் கேட்காமலே, நீங்கள் தான் ராஜா ராணி என்பதை பிரபுக்கள் சபை பிரசாரம் செய்துவிட்டது தெரியுமா?

ஒகோ! உங்கள் பிரசாரத்துக்கு மேடையில் எங்களிருவரையும் பூமாலைகளாக்கிப் போட்டுக் கொள்ளப் போகிறீர்களா? நன்றாயிருக்கிறது. எங்கள் சம்மத மில்லாமல் இணைத்துவைக்க, நானும் ஞானதேவரும் என்ன சந்தையிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/168&oldid=537734" இலிருந்து மீள்விக்கப்பட்டது