பக்கம்:இந்தியா எங்கே.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 167

விற்கும் மாடுகள் என்ற நினைவா? அவரை மறுமுறையும் விசாரியுங்கள்.

விவாக விஷயமாக அவனை விசாரிக்கும்படியாக எந்தச் சட்டமும் சொல்லவில்லை. உன்னையும்

நான் கேட்கமாட்டேன். தெரியுமா?

தெரியும். நீங்கள் ஒரு உயர்தரமான மாட்டு வியாபாரி என்று நன்றாய்த் தெரிந்து கொண்டேன்.

ஒகோ! உன் வாய்மதம் மீறிவிட்டதா? ஜாக்கிரதை' தந்தையே யாருக்கு மதம்? பெண்மையைப் பற்றி மகாத் தெரிந்தவர்போல் உமது மயக்கத்தை மாற்ற புதுமை மருந்துண் ணுங்கள்! புத்தி தெளியும்.

ஆ! வாயைப் பிளப்பதால் பயனில்லை. மனச் சாட்சி யின் கதவைத் திறந்தால் என் பேச்சு உமக்கு உண்மையைச் சொல்லும்.

பெண்ணே வேடிக்கையல்ல இது.

வினோதம்.

உலகம் சிரிக்கும்.

உள்ளம் கூடத்தான்.

உதாசீனம் செய்கிறாய். உண்மைக்கு, தாங்கள் தரும் மறு பெயர் உதாசீனமா?

சிறையில் தள்ளுவேன்.

சிரிப்போடு புகுவேன். கல் நெஞ்சமே இரக்கமற்றவள். அதுமட்டுமல்ல. கொடுமையாகிய எமது பிரதி பிம்பம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/169&oldid=537735" இலிருந்து மீள்விக்கப்பட்டது