பக்கம்:இந்தியா எங்கே.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் - 169

வான்

மன்

வான்

மன்

மன்

இன்ப

ஆம். விசுவாசத்தில் நான் நாய் தான். பெண் கொலை செய்யும் வேடனே விலகிப் போ.

ஆகா அவ்வளவு தூரம் ஆகிவிட்டதா?

பேயே! ஒரு கபடமற்ற ஜீவனை இப்படி வதை செய்கிறாயே! உன்னைப்பார்.

(புத்தம். எல்லா வீரரும் வந்து வானமகனைப் பிடிக்க) -

அடே இந்த நாயை இனி நகரத்தில் வைக்கா தீர்கள். சுரங்கத் தொழிலுக்கு அனுப்புங்கள். இந்த நகரத்துப் பக்கம் வரவே விடாதீர்கள்.

(് 6 ു)

கதிர் - 7

(இன்பவாகனனும் - மன்மதசகாயனும்)

மன்மத சகாயா! ஏன் இப்படி என் கருத்தை நெருக்குகிறாய்?

உமது போதனையில்லாமல் உமது மகன் இன்பக் கொடியை இவ்வளவு தீவிரமாக வெறுக்க மாட்டான். பாம்பின்பாதை பாம்பு அறியாது என்றெண்ணி நீர் உமது சூழ்ச்சியை வளர்ப்பது சுத்த முட்டாள் தனம். எப்படியும் அவன் என்மகளை மணக்கத்தான் வேண்டும். இல்லா விட்டால் என் எதிர்ப்புச் சக்தியைச் செலவாக்கா மலே உமது கிரீடத்தைச் சூட்டிக்கொள்ளும் ஆற்றல் இந்த மன்மத சகாயனுக்கு உண்டு என்பதை மறந்து விடவேண்டாம் மன்னரே!

நீ எதையும் செய்யவல்லவன். ஆனால் என் மைந்தன் ஞான தேவன் பிடிவாதத்திற்கு நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/171&oldid=537737" இலிருந்து மீள்விக்கப்பட்டது