பக்கம்:இந்தியா எங்கே.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

நம் தாய்

உன் ஜென்மம் புனிதமடைந்திருக்கும். போ. உனக்கு அந்தப் புண்ணியம் எப்படி வரும், போ. நாயே. சொந்த புத்திரியையே கொலை செய்து விட்டாயேடா!

(வேல்விழி, இன்பக்கொடியை உயிர்ப்பிக்கப் பாடுபடுகிறாள்)

இன்ப

ஞான

ஆ. சகோதரி! நான் பிழைக்கப் போவதில்லை. ஆனால், வானழகரைக் கண்டால் அவர் பெயரை உச்சரித்தவாறே இறந்ததாகச் சொல்ல மறந்து விடாதே. அண்ணா! சகோதரி சஞ்சலப்படாதே. உயர்ந்த உண்மை யைக் காக்கும் சேவையில் மடியும் நீ ஒரு தியாக ஜோதி. உன்னை நான் மறக்கமாட்டேன். ஆறுதல் கொள் ஆவி பிரிகையில் அலையாதே. வானழகன் காப்பாற்றப்படுவார். ஆம் அது போதும் அண்ணா. வேல்விழி! சகோதரி! நீயே அவரை ஏற்றுக்கொள்ளம்மா. (உயிர் பிரிகிறது

ஞானதேவா! வா. ஒரு ரகசியம்.

என்ன அது. நீ ஒரு அடிமைப் பெண்ணின் மகன்.

என்ன நானும் ஒரு அடிமைத் தாயின்

மைந்தனா..?

ஆமாம். நான் போகிறேன். வேல்விழி! இனி இங்கிருக்காதே. அய்யா! நீர் யாரென்று எனக்குத் தெரியாது, என்றாலும், என்னைக் காப்பாற்றியதாலும், என் கணவருக்குற்ற துணைவர் என்று தெரிவதாலும்,

சகோதரராக பாவிப்பது பிழையாகாதென்று

கருதுகிறேன். அண்ணா தியாகமான தங்கங்களுக் குரிய கடன்களை நாமே செய்து விடுவோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/184&oldid=537751" இலிருந்து மீள்விக்கப்பட்டது