பக்கம்:இந்தியா எங்கே.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

நம் தாய்

கதிர் - 11

(தங்கச் சுரங்கத்தின் அழகான பகுதியிலே அடிமைகள் தொண்டு செய்கிறார்கள். சிலர் சாகிறார்கள். சுரங்க வெடி விபத்தாலும், சரிந்து விழும் மண்கட்டிகளாலும் தாக்குண்டு சாய்கிறார்கள். கையொடிந்தாரும் கால் முறிந்தாரும் கறுப்புடை கொண்டு அலைகிறார்கள். அதிகாரிகள் வேலை வாங்குகிறார்கள். ஒவ்வொரு தொழிலாளியின் தலையிலும் ஒவ்வொரு மெழுகுத் திரிவிளக்கு சிம்னி வெளிச்சத்துக்காகக் கட்டப்பட்டுள்ளது. கையில் உளியும் சம்மட்டியும்) с

அதிகாரிகள் : (சாட்டை விசி) உம் சுறுசுறுப்போடு வேலை

செய்யுங்கள்.

ஒரு அடிமை : கொஞ்சம் பொறு அய்யா! ஒரு தோழன்

இறந்து விட்டான். அவன் பிணத்தை வெளியே கொண்டு போய் அடக்கம் செய்து வந்தபின் வேலை செய்யலாம். -

அதி 2 : சீ! அடக்கம் செய்ய தனிக்குழி ஒன்றும் வேண்டாம்.

அடிமை :

அதி 1

சுரங்கத்தின் மேல் எடுத்துப்போனால் ஆறடி ஆழத்தில் தானே புதைக்க முடியும். அதை விட இந்த ஆயிரம் அடிக்குழியிலே ஒதுக்குவது புண்ணியமல்லவா? போடா அடக்கம் செய்யப் போகிறானாம். எதிர்த்தா பேசுகிறாய்! (கசை வீசுகிறான், உம்,

பிணத்தைத் தாண்டிக்கொண்டு எப்படி அய்யா போவது? பாவமல்லவா.

தாண்டாதே. மேல் மிதித்துக்கொண்டு போ.

(மேலும் அடிக்கிறான். பழியுணர்ச்சியோடு ஆங்கு வந்து, இதைக்கண்ட வானமுகன் சம்மட்டிக் கொண்டு அதிகாரிகளைத் தாக்கி வீழ்த்தி ஆவேசத்தோடு அடிமையின் சவத்தை வாரி எடுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/186&oldid=537753" இலிருந்து மீள்விக்கப்பட்டது