பக்கம்:இந்தியா எங்கே.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

©ᎰᎱᎢöᎢ

நம் தாய்

நாகணவாய் வேடனிடம் அகப்பட்டால்

நாக்குழறிச் சிறகடித்து ஆவிசாகும்

நாற்றமிகு பன்றிதனை மனிதவெறி இரைக்காகக்

கைதுசெய்தால் நாற்கால்துக்கி நடுங்கிச்சீறும்

நாம் சொந்தநாட்டினிலே உரிமையெனக்

கேட்டதுவே துரோகத்தின் குற்றமென்றார்

குற்றமெனக் குதித்தவர்கள் கூரான விஷஈட்டி தன்னைத்தீட்டிக் குற்றுயிராய்க் குலைநடுங்கக் கிழித்திழுந்தார்

சாக்காடாம் சகதிதன்னில் பற்றற்று மிதிபட்டோர் பாலியர்கள்

என்றால் நான் பதறேன். ஆனால், சிற்றிடைகொள் கன்னியரின்

சிலையான வடிவமெல்லாம் சூறையிட்டார்!

நிறைவாகக் கருவுற்ற குறையாமாதர்

நலிவற்ற வயிறறுத்து நெஞ்சைவெட்டிக் குறைவற்ற கொலையுள்ளக் கரும்புலிகள்

காட்டுகின்ற தடியாட்சிக் கொடுமைக்காட்டில் கரையற்றபொறுமைக்குக் கடுமையெனும்

மேடிட்டார் அதன்மேல் நின்றேன் வெறிகொண்ட வீணர்களை வேட்டையிடும்

வினைசெயவே வந்துதித்தோம் வீரநாட்டீர்!

அடா கிளம்புங்கள். நாம் ஆயிரக்கணக் கானவர்கள். அவர்களைச் சாகச் செய்வோம் அல்லது செத்து மடிவோம். உம், இத்தகைய தங்கச் சுரங்கங்கள்தான் ஏழைகளின் சவக் குழிகள். நம் சீவக் குழிகளை நாமே வெட்டிக் கொள்ளும் வேலை தொலையட்டும். வெடி வைத்து இதனைப் புதைத்து விடுங்கள். பொன் மேனிராயனைப் பொடியாக்குங்கள். மன்மத சகாயன் மண்டை ஒட்டில் அவன் இரத்தத்தை எனக்குக் கொண்டு வாருங்கள். இன்பவாகனனது இருதயத்தை எனக்குத் தின்பண்டமாகத் தர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/188&oldid=537755" இலிருந்து மீள்விக்கப்பட்டது