பக்கம்:இந்தியா எங்கே.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 187

வேண்டும். இளவரசன் ஞானதேவனையும் நம்பாதீர்கள். அனைவரையும் சிறைப்படுத்துங்கள். எவரையும் நம்பாதீர்கள். ஆயுதமில்லையே என்ற அச்சம் வேண்டாம். விடுதலை விழா கொண்டா டப் போகிறீர்களா? நமக்குத்தான் அந்த விழா. சுதந்திரத் தோழர்காள்! விடுதலைச் சுடர்காள்! பிரபுத்வ நாவற் பழங்களைக் கிளைகளிலிருந்து உலுக்கிவிட்டுச் சாப்பிடுங்கள். செல்வப்பயிரின் செருக்கென்னும் கதிர்களை அறுவடைசெய்து, சீர்திருத்த அரிசிகொண்டு சுதந்திரப் பொங்கல் செய்து உண்ணுங்கள். பசி தீரும்; புறப்படுங்கள்.

திருப்புக் காட்சி

சுரங்கம் உடைபடும் அதிர் வெடிக்காட்சிகளின் ஒல மிடும் பின்னணி, பிரபுக்களின் தலைகளை ஈட்டிமுனை களிலே நாட்டி அடிமைகள் ஆரவார ஊர்வலம் வரும் காட்சி, பொன்மேனிராயனின் சித்ரவதைப்படலம், மலை கிள்ளுமாயனின் மரணவேதனை.

வான்

வில்லி

வான்

-

(பெரும் கிரிப்பு வெற்றி! தோழர்களே! அரண் மனைதான் மீதி நுழையுங்கள். தூளாக்குங்கள். என் பசி அதிகமாகிறது. அண்ணா! தங்கள் வேல்விழியும் வாணித்தாயும் கூட வந்துவிட்டார்கள். காணத் துடிக்கிறார்கள். காத்திருக்கிறார்கள். - * பெண்ணே! அவர்களை அங்கு அழைத்து வா. வேட்டை முடியும்வரை எவரையும் பார்க்க இயலாது. விரைவில் வா விடுதலை விழா மேடைக்கு.

திருப்புக் காட்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/189&oldid=537756" இலிருந்து மீள்விக்கப்பட்டது