பக்கம்:இந்தியா எங்கே.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.டி. சுந்தரம்

17


ஐயா சொல்லழகா கேள்! எல்லா நாடுகளையும் போல உன் நாட்டையும் நீ எடை போடாதே. இந்த நாட்டுக்குத் தனித்ததொரு பெருந்தன்மை உண்டு.

உலகிலே உயர்ந்த மலையாகிய இமயமலை இங்கிருப்பது போல், உலகில் உயர்ந்த மனிதாபிமானம் என்ற மாபெரும் செல்வம் இந்த நாட்டில் இமயமலையை விட உயர்ந்ததாக ஒரு காலத்தில் இருந்தது. அந்தப் பொற் காலத்தை மீண்டும் இந்நாடு பெற வேண்டுமென்று. பெரியோர்கள் நினைத்தபோது நாம் எதிர்பாராதவாறு அன்னிய ஆட்சி இங்கே ஆதிக்கம் பெற்றது. ஆம்.


விஞ்ஞான உலகம்
   மானிட சரித்திரத்தில் மிக மிக முக்கியமான காலத்தில் இந்திய நாடு அடிமைப்பட்டுக் கிடந்தது. கி.பி.17-18-19ம் நூற்றாண்டுகளில்தான் புதிய புதிய விஞ்ஞான சாதனங்களை மனிதன் கண்டுபிடித்தான். இயற்கையோடு போட்டியிட்டு இயந்திர வலிமையை வளர்த்துக் கொண்டிருந்தான்.மேற்குநாடுகள் சுறுசுறுப்போடு இயங்கிக் கொண்டிருந்த அந்தக் காலத்தில்தான் இந்தியா அடிமை உறக்கத்தில் அஞ்ஞானக் குறட்டைவிட்டுக் கொண்டிருந்தது. 
    தாய் நாட்டின் பழம் பெருமையை மறந்து, வருங்காலக் கடமையும் துறந்து, அன்று கிடைத்த நிகழ்காலத்து அற்ப சுகங்களுக்காக இந்தியன் தன்மானத்தை அன்னியர் பலருக்கும் அடகு வைத்திருந்தான்.
   அத்தகைய இருண்ட காலத்தில்தான் இங்கிலாந்தின் கப்பல் வியாபாரிகள் இந்தியக் கரைகளிலே வட்டமிட்டு வந்திறங்கினர். அவர்கள் இங்கே வெற்றி பெறுவதற்கு பெரிய படைகளைக் கொண்டு வரவில்லை. கண்ணாடிச் சாமான்கள், கட்டழகுப் பொருள்கள்,பிரித்தாளும் சூழ்ச்சி, கருத்தழிக்கும் திராட்சை ரசம், கொல்லும் வெடி
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/19&oldid=1401712" இலிருந்து மீள்விக்கப்பட்டது