பக்கம்:இந்தியா எங்கே.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 189

வான்

ஞான

வான்

வாணி

ஞான

வான்

ஞான

வாணி :

செய் உன்னிஷ்டப்படியே. இன்பவாகனனைப் பிடித்திழுத்து சிம்மாசனப் படிமீது தள்ளி வாளை ஒங்கி) அடே பாதகா! சொல்லிவிடு. நீ எனக்கு உண்மையில் தந்தையா? அப்படியானால் என்தாய் யார்? உண்மையைச் சொல்.

(வாணி ஓடிவந்து தடுக்க/

என்ன? இன்னுமா ஜீவகாருண்யம் உமது நெஞ்சிலே ஒட்டிக் கொண்டிருக்கிறது? வேண்டாம். தற்போது காருண்யம் எங்களுக்குப் பிடிக்காத ஒரு பிசாசு அதைக்கண்ட இடத்தில் என் தோழர்கள் வெட்டியெறிந்துவிட வேண்டு

மென்பது என் சபதம். தடுக்கக் காரணம் என்ன?

தயவு வந்துவிட்டதா இந்த மிருகத்தின் மேல்? அப்பா வானழகா! என்னருமை மக்களே! இவர் தானப்பா என் கணவர்.

ஆய (எல்லோரும் ஆச்சர்யத்தின் சிகரத்தில் இருக்க வேண்டும்)

ஆ! அப்படியானால் வேல்விழி? அப்படியானால் நான்..!

பொறுங்களப்பா சொல்லுகிறேன். நான் வாலிபமாயிருக்கும்போது ஒரு அடிமையாய் இத்தீவுக்கு வந்தேன். நான் ஒரு அரண்மனை அடிமை. அப்போது இவர் தனது வாலிபத்துக்கு என் மானத்தை இரையாக்கிக் கொண்டார். அதன் பயனாக ஜெனித்த குழந்தைதானப்பா நீ நீ பிறந்த மறுநாளே அப்போது பட்டராணியா யிருந்த பெண்ணுக்குப் பிறந்த பெண் தான் வேல்விழி. பிறந்ததும் அப்பட்ட ராணி பர லோகம் போய்விட்டாள். பிற்காலப் பட்டத்துக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/191&oldid=537758" இலிருந்து மீள்விக்கப்பட்டது