பக்கம்:இந்தியா எங்கே.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம் தாய்

இப்போதே பசிக்கேற்ற உணவாகத் தயாரா யிருக்கிறேன்.

தலைவரே விடுதலை செய்யுங்கள். தேவரை. வாணித்தாய் அவருக்கு மட்டும் தாயல்ல

எல்லோருக்கும் தாய்தான். அவர்களின் மனம் நோக வேண்டாம். ஆம். அந்த அம்மை தம்தாய்! நம்தாய் தான் தோழர்கள்ே! இனி நான் தலைவனல்ல. நம்தாய் சொல்வதே நமது சட்டம் நம் தாய் வாழ்க, பனித் தீவும் அன்பு:நாடும் இன்று முதல் ஒன்றுதான். முடியாட்சி மண்ணைக் கவ்வியது; இனி மக்களாட்சி, நம் தலைவிதியை நாமே நிர்ண யித்துக் கொண்டோம். இவ்விதியை எந்த நாளும் காப்போம். பெண்மையைப் போற்றுவோம் தாய்க் குலத்தின் தெய்வீக மானத்தைக் காப்பாற்று வோம். வெறியர்க்கு வேலையில்லை. வீணர்க்கு இட மில்லை. உழுதுபயிர் செய்து தொழிலாக்கம் கொண்டு வாழ்வோம். வாழ்க நம் தாய்! நம் தாய் வாழ்க!

திருப்புக் காட்சி

வாணித்தாய்க்கு எல்லா சுதந்திர தம்பதிகளும் மாலையிட்டு மலர் பொழிந்து, அர்ச்சனை செய்து, ஆராதனை செய்து நம்தாய் என்னும் ஆரம்பப் பாடலைப் பாடுகிறார்கள். அப்போது வானழகனும், வேல்விழியும் மணகோலத்தோடு வந்து, தாய் தந்த மாலையை இருவரும் மாற்றிக் கொள்ளுகிறார்கள். தாயை வணங்கி தம்பதிகளும் பாடுகின்றார்கள்.

திருப்புக் காட்சி

புதுமணத் தம்பதிகள் தேமதித் திருநாளில் மலர் வில்லும்; பூங்கணையுங் கொண்டு, இன்பப் போர் பயின்று எங்கும் எதிரொலி எழ, தாய்நாட்டுக் கீதத்தைப் பாடி விளையாடு

மற்றும்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/194&oldid=537761" இலிருந்து மீள்விக்கப்பட்டது