பக்கம்:இந்தியா எங்கே.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

இந்தியா எங்கே?


மருந்து, ராஜதந்திரம் என்னும் நயவஞ்சகம் இவைகளையே ஆயுதங்களாகக் கொண்டு வந்தார்கள்.

இங்கிருந்து கொண்டு போனது, நவ ரத்தினங்கள், முத்துக் குவியல்கள், மிளகு, ஏலம், கிராம்பு, தந்தம் போன்ற சிறந்த செல்வங்கள். அத்துடன் இந்தியரின் தன்மான உணர்ச்சியையும் ஏற்றுமதி, செய்ய முயற்சித்தார்கள். இந்தியர்களின் கைத்தொழில்கள் தகர்க்கப்பட்டன. உரிமைகள் பறிக்கப்பட்டன. பொருளாதாரம் அழிக்கப்பட்டது.

இங்கே ஒற்றுமையின்றி தனிக்காட்டு ராசாக்களாக இருந்த மன்னர்களையும், மடையர்களையும் மாய வலைவீசி மயக்கி வைத்தான் வெள்ளைக்காரன். ஏமாந்த சில இஸ்பேட் ராஜாக்களை இஷ்டம்போல் மொட்டையடித்த தோடு மூடர்களாகவும் ஆக்கி விட்டான். தாய் நாட்டுக்குத் துரோகம் பண்ணப் பயிலும் துரோகப் பள்ளியே வைத்து விட்டான்.

வாணிபச் சாலையில் வெடி மருந்தை நிரப்பினான். அதை வேற்றுமைப்பட்ட சுதேச வேந்தர்களுக்கு விற்றான். விலையைப் பணமாக வாங்காமல், நிலமாக வாங்கினான். இந்த புத்திசாலி ராஜாக்களும் அவன் கேட்டபடி இடங் களைக் கொடுத்துக் கொண்டே இருந்தனர். வந்தவன் வளர்ந்து கொண்டே இருந்தான். இங்கே இருந்தவன் தளர்ந்து கொண்டே இருந்தான்.

வாங்கிய நிலத்தைச் சதிபல பேசிச் சாசனமாக்கிக் கொண்டான்.

கூடாரம் அடித்த அவன் கோட்டைகள் கட்டலானான். மர வீட்டில் வசித்த அவன் மாளிகை வாசியானான். இவ்வாறு ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரி ஆகி விட்டது.

பிழைக்க வந்த நாடோடி புலியாகும் தகுதி பெற்றான். இவ்வளவு தூரம் வெள்ளையன் முன்னேறிய பிறகுதான், இந்திய ராசாக்களுக்கு ரோசம் பொத்துக் கொண்டு வந்தது. இ.எ - 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/20&oldid=1401713" இலிருந்து மீள்விக்கப்பட்டது