பக்கம்:இந்தியா எங்கே.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

இந்தியா எங்கே?


இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆண்மையின் எழு ஞாயிறாகத் தோன்றிய அறிவின் இளங்கதிரோன் திலக மகான். தேசபக்தியை நாடெங்கும் பரப்பி நல்லதொரு போராட்டச் சூழ்நிலையைப் பண்படுத்தி வைத்தார். அவர் போட்ட சுதந்திர விதையை மக்கள் மன வயல்களில் மேலும் தூவி, பருவத்தே மக்கள் மன வயல்களில் மேலும் தூவி, பருவத்தே பயிர் செய்யும் பொறுப்பு காந்தி மகான் கைக்கு வந்தது.

 1928-ல் நாடெங்குமுள்ள தலைவர்களின் தலைகளை தடிகளால் அடித்துப் பதம் பார்த்தது அரசாங்கம். அதில் பலியானார் பாஞ்சால சிங்கம் லாலா லஜபதிராயும் ஆயிரமாயிரம் வீர வாலிபர்கள் ஆவி நீத்தனர்.

மகாத்மா காந்தியடிகள் பாரத தேசமெங்கும் பிரயாணம் செய்து, விரிவானதொரு பொதுமக்கள் இயக்கத்தை உருவாக்கினார். மூலைமுடுக்கில் எல்லாம் தேசபக்தியைப் பரவச் செய்தார். படித்த சிலரையும் பொதுமக்கள் பல கோடிப்பேரையும் தமது புதிய போர்முறைக்குத் தகுந்தபடி பழக்கினார்.

நாகரிகப் போர்!

ஆெள்ளையன் ஆயுத பலத்தால் மட்டும் நம்மை ஆளவில்லை. அறிவின் சூழ்ச்சியாலும் ஆளுகிறான். ஆகவே முதலில், அவன் அறிவில் உள்ள கோளாறை போக்கினால் தான் ஆதிக்க வெறியைப் போக்க முடியும் என்ற நுட்பத்தை நாட்டவருக்கு விளக்கமாகச் சொன்னார். வியாபாரியின் சூழ்ச்சியை வீரத்தின் நேர்மையால் வெல்ல எண்ணினார்.

கோடாணு கோடி மக்களைத் தமது காந்த சக்தியால் கவர்ந்தார். தியாக சக்தியால் செயல்படச் செய்தார். சுதந்திர ஊற்றை உள்ளத்தில் ஊறச் செய்தார். சிறந்த செல்வாக்கும் மக்களின் நம்பிக்கையையும் நிரந்தரமாகப் பெற்றார். ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/22&oldid=1401715" இலிருந்து மீள்விக்கப்பட்டது