பக்கம்:இந்தியா எங்கே.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

இந்தியா எங்கே?


வந்த சுதந்திரம் வெறும் வாய்மொழியால் வந்தது அல்ல. பல நூற்றாண்டுகளாய் பற்பல போர்க்களங்களில் நமது பாரத வீரர்கள் வெட்டுண்டபோது பெருகிய இரத்த ஆறுகள், நமது பாரத சுதந்திரம் பயிருக்குரிய நீராகப் பாய்ந்தது! என்பதை மறந்து விடக்கூடாது. பீரங்கி முனையில் பஞ்சு பஞ்சாகப் பிய்த்தெறியப்பட்ட நம் சகோதரர்களின் எழில்மிக்க உடலங்கள் எல்லாம் நாம் அனுபவிக்கும் சுதந்திரச் சோலைக்குரிய உரமாக்கப்பட்டன, என்பதையும் மறவாமல் இதயத்தில் பதித்துக் கொள்ள வேண்டும். தூக்கு மேடைகளை முத்தமிட்ட தியாகச் சுடர்களின் உண்மைச் சேவை. வாளேந்திப் போர் புரிந்த வீரமாதரின் உளத்துடிப்பு. நீலன் போன்ற காலர்களிடம் அகப்பட்டுச் சித்ரவதை அனுபவித்த இந்நாட்டுப் பெண்கள், குழந்தைகள், கிழவர்கள், கிழவிகள், இவர்கள் பட்டபாடு! இவற்றையெல்லாம் நமது நெஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிலும் பதித்துக் கொண்டால்தான் வந்த சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கேற்ற நிரந்தரமான வழி நமக்குப் புலப்படும்.

எத்தனை லட்சம் பேர்கள்! எப்படி எண்ணுவது! பெரும் புயலில் விழுந்த பச்சை மரங்களை எண்ணி விடலாம். வாடியுலர்ந்து கருகி வீழ்ந்து கால வெள்ளத்திலே மறைந்து போன மலர்களையும், இலைகளையும், காய்களையும், கனிகளையும் சரித்திர ஆசிரியர்கள் கூடக் கணக் கெடுக்க முடிவதில்லை. ஆகவே, ஊர்பேர் தெரியாமல் உயிரையிழந்த லட்சோப லட்சமான அந்த லட்சிய வீரர்களுக்கு, நமது நன்றியின் அஞ்சலியைச் செலுத்துகிறோம். நமக்காக மறைந்த மாவீரர்களோடு தோளோடு தோள் நின்று போராட்டத்தில் ஈடுபட்டு இன்றும் உயிரோடு இருக்கும் சில உத்தமர்களுக்கும் நமது சிரந்தாழ்ந்த வணக்கங்கள் உரியதாகும். போர் புரிந்து அமரர்களாகி விட்ட மாணிக்கங்களுக்கிருந்த துணிச்சலும், தூய்மையும், தியாக புத்தியும் நமக்கு ஓரளவாவது வர வேண்டும் என்று வேண்டி முயற்சிக்க வேண்டும். அப்போது தான் நமது நாட்டுக்குரிய நமது கடமைகளை குறைவின்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/26&oldid=1401718" இலிருந்து மீள்விக்கப்பட்டது