பக்கம்:இந்தியா எங்கே.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம்

27


நானூற்றை முழங்கி விட்டு புறமுதுகை காட்டி ஒதுங்கக் கூடாது. -

உலகரங்கத்தில் நமது நாடும் ஒரு அங்கம் என்ற எண்ணம் வேண்டும். மேலோர்கள் வாழ்ந்த இந்நாடு மீண்டும் ஒருமுறை தனது மகோன்னதமான சிறப்பைப் பெற்று விளங்கிட வேண்டும்.

இன்றைய நிலை

இது நாம் எதிர்பார்க்கும் சமுதாயம். ஆனால் இன்று நாம்காணும் வாழ்க்கை ஒரு சீரழிந்த சித்திரமாக அல்லவா இருக்கிறது. நல்லவன் அல்லல் படுகிறான். கெட்டவன் சுகமடைகிறான். யோக்கியமானவன், நோய்க்கு மருந்துகூட வாங்கமுடியாமல் சாகிறான். அயோக்கியன் ஆடம்பரமாக வாழ்கிறான், தேசபக்தன் பட்டமரமாகித் தெருவிலே நிற்கிறான். தேசத்துரோகி அந்தப் பட்ட மரத்தை வெட்டித் தன் அடுப்பிலே எரித்துக் குளிர் காய்கிறான். குலப் பெண்கள் தங்கள் மனப் பொருமல்களை வெளியே சொல்லக் கூட முடியாமல் குமுறி அழுகிறார்கள். மற்ற வர்கள் எல்லா சிறப்புகளையும் பெற்று வீதியிலே ஊர்வலம் வருகிறார்கள்.

இயற்கையழகு எரித்துக் கரியாக்கப்படுகிறது. செயற்கைச் சிங்காரம் சிந்தையை அடிமையாக்குகிறது. வாங்குபவன் வறிஞனாகிறான். விற்பவன் வள்ளலாகிறான். குழந்தைகள் உணவில்கூட கலப்படம் செய்யும் கள்ள வியாபாரி சேர்மன் பதவி வகிக்கிறான். மகாவஞ்சகன் கூட மந்திரியாகிறான்! குடிகாரன் உபதேசியாகிறான். குற்றவாளி நீதிபதியாகிறான். காமுகன் கண்ணகிக்குக் கோயில் கட்டுகிறான். கள்ளுக்கடைக் காரன் காந்திக்கு சிலை வைக்கிறான். கசாப்புக் கடைக்காரன் ராமலிங்க சுவாமிக்கு மடம் கட்டுகிறான். கோயில் பூசாரி சிலையைக் கொள்ளையடிக்கிறான். வரிகட்டும் குடிமகன் கைகட்டி நிற்கிறான். வரிப்பணத்தால் பிழைக்கும் அரசாங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/29&oldid=1401721" இலிருந்து மீள்விக்கப்பட்டது