பக்கம்:இந்தியா எங்கே.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

இந்தியா எங்கே?


எரிமலை!

'இவனை மட்டுமல்ல இவன் பிறந்த குடும்பத்தின் கடைசி ஆள்வரை - இவன் பிறந்த சித்பவன் வம்சாவளியின் கடைசி முனைவரை - எரித்துச் சாம்பலாக்கினாலன்றி பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இந்தியாவில் நிலைத்திருக்க முடியாது” என்று ஆங்கிலேயர் அஞ்சி அலறும்படியாக, எதிரியின் மண்டையில் புரட்சி ஆணிகளை அடித்து, அவன் அறிவைச் சின்னாபின்னமாக்கிக் கொண்டிருந்த அஞ்சா நெஞ்சன் விடுதலை வேள்வியின் வீர விஸ்வாமித்திரன்; அஞ்சிப் பிழைக்கும் எலிகளை ஆண்மைப் புலிகளாக்கிய சட்ட மேதை காவிலும் கையிலும் கடுவிலங்கைப் பூட்டிய போதும், கலுைம் விழியோடு காறிஉமிழ்ந்து சிரிப்பான். அந்தமான் தீவா? அனுப்படா மடையா? அதுவும் என் அரண்மனைதான்”, என்று அன்னியர் தனக்குக் கொடுத்த சொல்ல முடியாத சித்ரவதைகளை அழகின் சித்திரங்களைப் போலப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தானே வீரவிநாயக தாமோதர சாவர்க்கார் இந்தப் பெயரை நீ கேள்விப் பட்டிருக்கிறாயா தம்பி? இவனும் உன்னைப் போல மனிதன்தான். இல்லை, இல்லை. உன்னையும் என்னையும் விட அதிகமாகப் படித்துப் பட்டம் பெற்ற சட்டமேதை! பகலெல்லாம் தூங்கிவிட்டு, மாலை நேரங்களில் மலர்ப் பூங்காக்களிலே எலெக்ஷன் பிரசங்கம் செய்து என்னரும் மக்களை ஏமாற்றவல்ல சொல்லழகனல்ல அவன்? சுதந்திரப் போரின் தளபதி சுழன்றடிக்கும் சூறாவளி!

அவன் சொல்லிலே சுதந்திரத்தின் கனல் பறக்கும்! அவன் செயலிலே எதிரிகளின் தலை பறக்கும்! அடுக்குச் சொல் அழகனல்ல, போர் தொடுக்கும் செயல் வீரனவன். வாள் பிடிக்கும் அவன் கையில் வரலாற்றுப் பேனா விளையாடியது. எழுச்சி மிக்க “எரிமலை’ என்ற வரலாற்று நூலின் பேராசிரியன் இவன்தான். தான் செய்த தியாகத் திற்கு பட்டபயங்கரமான வேதனைக்கு ஆறுதலாக, ஒருநாள் கூட அவன் மந்திரியானதில்லை. ஒரு முனிசிபல் வட்டக் கவுன்சிலர் பதவிக்குக்கூட அவன் ஆசைப்பட்டதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/34&oldid=1401726" இலிருந்து மீள்விக்கப்பட்டது