பக்கம்:இந்தியா எங்கே.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம்

33


என்ன தம்பி! வியப்பாயிருக்கிறதா இன்னும் கேள்! அவனுக்கு யாரும் பொன்னாடை போர்த்தவில்லை. பொற்கிழி அளிக்கவில்லை. புதிய கார் பரிசு தரவில்லை. வழியனுப்பு வரவேற்பு விழாக்களை அவன் சந்திக்கவில்லை. இந்நாட்டின் விடுதலைக்காகப் போரிட்டு மடிந்த அந்த வீரத்தளபதி அனுபவித்த ஒரே ஒரு விழா. அவனது கடைசி ஊர்வலந்தான். அதையும் பாவம் அவன் காணவில்லை. எப்படிக் காண முடியும்! அவனுடைய உடம்பைக் கூட, சந்தனக் கட்டையில் எரிக்கச் சொல்லவில்லை. சமாதி வைக்கச் சொல்லவில்லை. 'இறந்தபின் ஒரு ஏழையைப் போல என் உடம்பையும் எலக்டிரிக் அடுப்பிலே போட்டு விட்டு, அவரவர் வேலையை கவனியுங்கள். அழுது கொண்டி ருக்காதீர்கள். ஆண்மையோடு கடமையைச் செய்யுங்கள். தொழுது பிழைக்காதீர்கள். துணிச்சலோடு வாழுங்கள். தேச விடுதலையைக் காப்பாற்றுங்கள்!” என்று கூறிய அந்த மாவீரன் இறந்து பட்டொழிந்தானே எதற்காக?

அசடுகளும் கசடுகளும் பஞ்சைகளும் பாவிகளும் வஞ்சகப் பூசாரிகளாகப் பவனி வருகிறார்களே. இந்தப் பதர்களெல்லாம் வாழத்தானா? அந்த மாவீரன் பாடு பட்டான்?

துக்குமேடை

இருபத்திரண்டே ஆண்டுகள்! இரும்பு போன்ற இறுகிய தசைகள் எஃகு போன்ற வலிமையான நரம்புகள்! எழில் ததும்பும் திருமுகம் சுடர் பறக்கும் விழிகள்! மலை கலங்கினாலும் நிலை கலங்காத நெஞ்சுரம் அரும்பு மீசை! அணையாத ஆசை சிரிக்கும் உதடு சிந்திக்கும் பார்வை! செம்மையின் சீலம்! சிதறாத கொள்கை உறங்கிக் கிடந்த தாய் நாட்டை உலுக்கி எழுப்பிய புரட்சிவேகம் ஒடுங்கிப் போன சமுதாய மனச் சான்றினை ஓங்கிக் கேட்கும்படி செய்த உண்மையின் கூக்குரல் உணர்ச்சியின் எதிரொலி! புரட்சியின் களப்பலி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/35&oldid=1401727" இலிருந்து மீள்விக்கப்பட்டது