பக்கம்:இந்தியா எங்கே.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

() இந்தியா எங்கே?

சிண்ணத் தம்பி!

ம்பி! நம் சின்னத் தம்பியைத் தெரியுமா உனக்கு? எரிைெலயான அவன் சிவந்த முகத்தைப் பார்! அவன் பேர் தெரியமா உனக்கு? மகா காளி நடனமிடும் புரட்சிப் போர்க் களமான வங்கத்தில் பிறந்த அவனைப் படுதீவிரவாதி என்கிறார்கள். பதறி நடுங்குகிறார்கள். நீ ஏனடா தம்பி நடுங்குகிறாய்? பயப்படாமல் நம் சின்னத் தம்பியின் முகத்தை நன்றாகப் பார்!

அஞ்சாதே! அவன் உன்னையும் என்னையும் ஒன்றும் செய்யமாட்டான். நம்முடைய கேள்விகளுக்குரிய பதில் சொல்லாமல் இந்தப் பெரிய மனிதர்கள் நம்மை ஏமாற்றப் பார்த்தால் இந்தச் சின்னத் தம்பி அவர்களைச் சின்னா பின்னமாக்கி விடுவான்!

என்ன செய்வது? அனுபவித்தவர்கள் அபராதம் செலுத்தித்தான் தீரவேண்டும். போர்பந்தரில் பிறந்த தேசத் தந்தையின் சத்திய மொழியைக் கேளாத இந்த தன்னலச் சமுதாயம், இன்று போர்க்களத்தில் பிறந்த சின்னத் தம்பியின் பயங்கரக் கேள்விக்குப் பதில் கூறவேண்டிய நெருக்கடியை, தானே உற்பத்தி செய்துகொண்டது! சின்னத் தம்பியின் செயல் நமக்குப் பிடிக்காமலிருக்கலாம். ஆனால் கல்நெஞ்சம் கொண்ட சிலருடைய அலட்சிய புத்தி சிருஷ்டித்துவிட்ட கல்கி அவதாரத்தின் கனல் சக்திதான் நம் சின்னத் தம்பி!

அஜாக்கிரதையினாலும் அறிவின்மையாலும் உடம்பை அழிக்கும் வியாதியை உடம்பிலேயே உற்பத்தி செய்து கொண்டு, அதற்கு அறுவை சிகிச்சையைச் செய்து கொள்வதைப்போல், பெற்ற சுதந்திரத்தை அழிக்கும் ஒரு கொடிய அராஜக வேதனையை, இந்தச் சமுதாயமே உற்பத்திச் செய்துகொண்டு, இன்று படாதபாடு படுகிறது! படிக்காத மாணவன், பரீட்சைக் கேள்வியைக் கண்டு விழப்பது போல், இப்பொழுது தம்பியின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் சமுதாயம் விழிக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/42&oldid=537601" இலிருந்து மீள்விக்கப்பட்டது