பக்கம்:இந்தியா எங்கே.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 41

இந்தச் சமுதாயத்தை இந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டவர்கள் யார் தெரியுமா? இந்நாட்டை முப்பது ஆண்டுகளாக ஆளவந்தவர்களான அரசியல்வாதிகள், ஈவு இரக்கமற்ற கள்ள வியாபாரிகள், இந்த இரண்டு பேருக்கும் ஒத்தாசை செய்யும் ஏட்டுப் பூச்சிகளான பழுதுபட்ட அதிகார யந்திரம் இம்மூன்று பேருக்கும் கால் பிடித்துவிடும் சுயநலச் சோம்பேறிக் கூட்டம். இந்த நான்கு வர்க்கத்திற்கும் இரையாகி, மடிந்து கொண்டிருக்கும் இந்திய மக்களின் வாழ்க்கை எரியும் நரகமாகி வருகிறது.

பற்றி எரியும் வேகத்திலே. பல கேள்விகளைக் கேட்கிறது நாடு அதிலே சில கேள்விகளை இங்கே தருகிறோம். சீக்கிரம் பதில் வேண்டும்! இல்லாவிட்டால் சின்னத் தம்பி சீறி எழுவான்!

உலக உத்தமர் தலைமையிலே, சுதந்திரத்தை யாருக்காக, எதற்காக வாங்கினோமோ, அந்த மக்களுக்காக சுதந்திரத்தின் பலனையும் கடமையையும் பகிர்ந்தளிக்கும் பணியைச் செய்தோமா?

“சொல்வதைச் செய்; நீ செய்ய முடிந்ததை மாத்திரம் மக்களுக்குச் சொல்” என்று தலைவர்களுக்கு அண்ணல் சொன்ன பாடம் என்னவாயிற்று? இப்பாடத்தை எந்த அரசியல் தலைவன் பின்பற்றுகிறான்?

“இந்நாட்டுக்கோடானுகோடி ஏழை மக்களுக்கு, இந்த நாட்டின் முன்னேற்றத்தில் பங்கிருக்கிறது - பொறுப்பி ருக்கிறது - என்பதை அவர்கள் உணரும்படியாக அரசியல் முறை அமைய வேண்டும்” என்று அண்ணல் எதிர் பார்த்தாரே, அப்படி நாம் செய்தோமா?

ஐந்தாண்டுத் திட்டங்களால் வளம் பெருகும். அந்த வளத்தின் பலன், பாடுபட்ட எல்லோருக்கும் உரிய முறை யில் கிடைக்க வேண்டும், என்று பண்டித நேரு ஆசைப் பட்டாரோ? அந்த ஆசையை நிறைவேற்ற ஏதாவது செய்தோமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/43&oldid=537603" இலிருந்து மீள்விக்கப்பட்டது