பக்கம்:இந்தியா எங்கே.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 இந்தியா எங்கே?

அடிமையாக இருந்தபோது, மொழி மதச் சண்டை யின்றி, உலகிலேயே. வலிமை மிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வெற்றி பெற்றோமே - அந்த வெற்றிக்குக் குழி தோண்டும் வகையில் இன்று எல்லாவகையான வேற்றுமை களையும் உரம் போட்டு வளர்க்கிறோமே - அது ஏன்?

ஜனநாயகம் வளரவேண்டுமெனில், தலைவர்கள் எனப்படுவோர் நன்கு ஆராய்ந்து மிகவும் எச்சரிக்கையாக நடந்து, ஜனங்களுக்கு நல்வழி காட்டி நம்பிக்கை ஊட்டவேண்டும். அப்போதுதான் தலைவர்களிடத்தில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். வழிகாட்டிகளாக இருக்க வேண்டிய தலைவர்கள், கை காட்டி மரம் போல எங்கோ நின்றுகொண்டு “போங்கள் போங்கள்” என்று மக்களைத் துரத்துகிறார்களே. இது நியாயமா?

தங்களுக்குள் கொள்கை ஒருமைப்பாடு இல்லாமல் ஆளுக்கு ஆள் ஆழக் குழித்தோண்டிக் கொண்டு அதே சமயத்தில் மக்களைப் பார்த்து ஒன்றாக இருங்கள். உறுதியாக இருங்கள். ஒழுங்காக இருங்கள். என்று உபதேசம் செய்தால். அதை யார் கேட்பார்கள் என்று இவர்கள் நம்புகிறார்கள்?

இந்நாட்டின் கள்ள வியாபாரிகளைத் துரக்கில் போடுவேன்” என்று நேரு கூறினார்! நேருவின் கற்பனைத் தூக்கு மரத்தைக் கண்டு பயந்து நம்நாட்டில் கள்ள மார்க்கெட் நிபுணர்களின் தொகை குறைந்திருக்கிறதா? இல்லையென்றால், அவர்களை வெல்ல வேறு வழி இருக்கிறதா? நாளது வரை இல்லையே! ஏன்? எதனால்? ஒளி வீசிய ஆசிய ஜோதி - பாரத ரத்தினம் நேருவாலேயே முடியாத ஒன்றை - மற்ற கண்ணாடித் துண்டுகளா சாதிக்கப் போகின்றன?

இந்நாட்டுக் குழந்தைகளுக்கு பல நாடுகள் நல்ல உள்ளத்தோடு அன்பளிப்பாகக் கொடுக்கும் பால் பவுடரைத் திருடி, அதில் தவிட்டைக் கலந்து. நாலு பங்கு விலைக்கு விற்றுப் பல குழந்தைகளுக்கு வயிற்று நோய் வரச்செய்யும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/44&oldid=537604" இலிருந்து மீள்விக்கப்பட்டது