பக்கம்:இந்தியா எங்கே.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 இந்தியா எங்கே?

யான குற்றம்? இந்த வருங்கால நாச காரியங்களை வேட்பாளர்கள் செய்யாமல் தடுப்பது நம் கடமை யில்லையா?

தேர்தல் முறை

இந்த நாட்டில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா? வேண்டுமெனில், ஜனநாயகத்தின் சான்றாக இருக்கும் வயது வந்தவர் ஒட்டுரிமை நன்கு பயன்படுத்தப் படுகின்றதா?

தேர்தலுக்கு நிற்பவர்கள். சட்டத்தில் அனுமதிக்கப் பட்டிருக்கும் தொகைக்கு மேல் செலவழிக்கவில்லையென்று நெஞ்சிலே கை வைத்துச் சொல்ல முடியுமா? நாட்டுப் பணி செய்யும் தூய்மை, வாய்மை, தகுதி, ஆற்றல் அவர்ககு உண்டா? எல்லாரும் நீதி பற்றிப் பேசுகிறார்கள், ஆனால் நடக்கத்தான் முடிவதில்லை! பாவம்: பைத்தியக்காரன் பேசும் பேத்தல் தத்துவம்!

பெண்ணொருத்தி, தன் கணவன் வாங்கித் தந்த சேலையை விற்றுவிட்டு, தன் ஆசை நாயகனுடன், “பெண்ணின் பெருமை”யென்ற பேசும் படத்திற்குப் போவதுபோல், தேர்தலில் நிற்பவர்கள் அறிந்தோ அறியாமலோ முடிந்தோ முடியாமலோ சட்டத்தின்படி நடக்க இயலாதவர்களாகி விடுகிறார்கள்! இவர்களைக் கண்டு நாம் பரிதாபப்படு கிறோம். இந்த முறையைக் கண்டு வெட்கப்படுகிறோம்! நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் ஒரு பெரிய தீமை இது. இந்நிலை தேவைதானா?

எதைச் செய்தாவது போரிலும் காதலிலும் வெற்றி யடையலாம் என்பதைப்போல, எதைச் செய்தாவது தேர்தலில் வெற்றி பெறுவது என்ற நிலைவந்து விட்டது! இந்தக் கொடுமை வேண்டுமா? தேவைதானா?

கன்னிப் பெண் ஒருத்தி, கல்யாணத்தை வெறுத்து, கர்ப்பத் தடை செய்துகொண்டு, கருத்தைத் தடை செய்யாமல் கண்டபடி அலைந்தபின், கண்ணகி வேடத்தில் நடித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/46&oldid=537606" இலிருந்து மீள்விக்கப்பட்டது