பக்கம்:இந்தியா எங்கே.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 45

திறமைக்கு பொற்சிலம்பும் பரிசு பெறுவதுபோல, நாட்டுக்காக தன்னலத்தை வெறுத்ததாகச் சொல்லிக் கொண்டுவரும், பல பொதுநலவாதிகள், தேர்தலிலே எப்படியோ நடித்து வென்று பதவியைப் பிடித்து விடுகிறார்கள்.

ஒரு பிரமுகர், தேர்தலுக்கு நின்றால், முதலில் எவ்வளவு பணம் செலவழிக்க முடியும்; என்ன ஜாதி; என்ன கட்சி என்ற தகுதியைத்தானே எல்லாக் கட்சிகளும் முதன்மை யாகப் பார்க்கின்றனர்! நல்லவனா, நாணயமானவனா, அறிவாளியா என்று கேட்பதில்லையே! இப்படி நீதியின் தற்கொலையே நியதியாகி விட்டது!

ஒரு ஒட்டுக்குப் பத்து ரூபாய், ஒரு வீட்டுக்கு நூறு ரூபாய், ஒரு தெருவுக்கு ஆயிரம், வட்டத்துக்குப் பத்தாயிரம், தொகுதிக்கு லட்சம். இப்படி லட்சக்கணக்கிலே செலவு செய்து. வெற்றி பெறும் அந்தப் புகழுக்குரிய பொது நலவாதி தான்பட்ட கடனைத் தீர்க்க மேற்கொண்டு லாபத்தைப் பார்க்க - வெகு சீக்கிரம் சுயநலவாதியாகிவிடும் விபரீதத்தையும் நாம் பார்க்கவில்லையா? வியாபாரிகளிடம் லட்சக்கணக்காக - அன்பளிப்பாக வாங்குவதற்கு லஞ்சம் என்ற பெயரில்லை என்ற புது இலக்கணமும் வகுக்கப்பட்டு விட்டது தம்பி! இது நல்லதொரு விளக்கம்! நாகரீகத்தின் கடைசி மூச்சு தர்மத்தின் மரண ஊசி! நீதியின் கடைசி துடிப்பு!

பெரும்பாண்மை - சிறுபாண்மை

இப்படி ஒருவரை ஒருவர் ஏமாற்றி, கடைசியில் எல்லோரையும் எல்லோரும் ஏமாற்றிக்கொள்ளும் இந்த விபரீதத் தேர்தல் முறையால், யாருக்கு என்ன லாபம் என்று நாம் எண்ணிப் பார்க்க வேண்டாமா? இப்படிச் சொல்லுப வர்களை “ஜனநாயக விரோதிகள்” என்று வெறுத்து ஒதுக்கிவிட முடியுமா? அல்லது பெரும்பான்மை முடிவு என்பதற்காக. நாம் எதையும் சகித்துக் கொள்ள முடியுமா? உதாரணமாக நம்மில் பெரும்பான்மையோர் திடீரென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/47&oldid=537607" இலிருந்து மீள்விக்கப்பட்டது