பக்கம்:இந்தியா எங்கே.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 இந்தியா எங்கே?

முப்பது ஆண்டுகளாக நாம் ஏதேதோ ஒரு முறையை நம்மிஷ்டப்படி அனுசரித்தோம்! ஆனால், அந்த முறையில் புதிய சமுதாயத்தை நம்மால் அமைத்துக் காட்ட இயலவில்லை.

சுதந்திரம் யாருக்கு? எதற்கு? என்ற கேள்விக்கு செயல் பூர்வமான பதிலை நாம் செய்து காட்டமுடியவில்லை.

உலகப் புகழ்பெற்ற பண்டித நேருவின் தலைமை யிருந்தும், நமது ஆசைப் பயணம் தனது லட்சியத்தை அடைய இயலவில்லை. ஆகவே நாம் நமது நடைமுறையை மாற்றிக் கொண்டே ஆகவேண்டும் என்பது தெளிவாகி விட்டது.

மன்னர்களும் மந்திரிகளும்

0ாறுவது என்பது அவ்வளவு லேசான காரியமல்ல, காரணம், நாமெல்லாம் பழக்கத்திற்கு அடிமையானவர்கள்! முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், இந்திய சமஸ்தானங்களில் ஐநூறு மன்னர்களைப் பார்த்து, “மன்னர்களே! காலத்தின் தேவைக்கேற்ப நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்” என்று கேட்டோம் முதலில் அவர்கள் தயங்கி னார்கள். சர்தார் படேலின் சிறந்த ராஜதந்திரம் அவர் களைப் பணிய வைத்தது.

இன்றிருக்கும் இளையசமுதாயம் ஐநூறு மன்னர் களுக்குப் பதிலாக இந்நாட்டை நடத்திக் கொண்டிருக்கும் ஐநூறுக்கும் மேலான மந்திரிகளைப் பார்த்துக் கேட்கிறது.

"ஓ! மந்திரிகளே காலத்தின் தேவைக்கேற்ப நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். நீங்கள் ஆடம்பர மாக வாழ்ந்து விட்டீர்கள். இனி நாங்கள் வாழவேண்டிய வர்கள் நீங்கள் பேசுவது ஒன்று, செய்வது வேறொன்றாக இருக்கிறது. உங்கள் மீது நாங்கள் வைத்த சகல நம்பிக்கையும் சர்வநாசமாகி விட்டது: - ് .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/54&oldid=537614" இலிருந்து மீள்விக்கப்பட்டது