பக்கம்:இந்தியா எங்கே.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 இந்தியா எங்கே?

ஆகிவிடாது. நீங்கள் மாறினால்தான் “சுதந்திரம் யாருக்கு” என்ற கேள்விக்கு ஏற்ற விடை கிடைக்குமென்று நாடு நம்புகிறது. ஏனிதைச் சொல்லுகிறோம்? எழுந்து நின்று கேளுங்கள் எங்கள் எண்ணத்தை உங்கள் இதயச் செவி திறந்து கேளுங்கள். அண்ணல் மகாத்மா அன்று சொன்னார். நீங்கள் கேட்கவில்லை. இன்னல்பட்ட இளைய சமுதாயம் இதோ கூறுகிறது கேளுங்கள்.

"இந்த நாட்டில் மனித வாழ்வு. வேகமாகக் கீழ் நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்து கிடக்கும் பிச்சைக்கார மந்தைகள், எச்சிலைகளைப் பொறுக்க, லைசென்ஸ் இல்லாத நாய்க ளோடு சண்டையிடுகின்றன. மானிடப் பண்புகள் வெகு விரைவாகக் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. சிலர் வாழ, பலர் நாசமடையும் பயங்கரத்தைப் பார்க்கிறோம். மண்ணாசையுடன் மடியும் மனிதக் கும்பல் ஒருபுறம், பொன்னாடை பூட்டிப் பொலியும் போலிக் கூட்டம் ஒருபுறம், "தாவி செய்யத் தங்கமில்லையே” என்று தவிக்கும் ஏழைக்கூட்டம் ஒருபுறம், “தங்கத்தால் செங்கல் செய்து பங்களா எழுப்ப முடியவில்லை”ே என்று ஏங்கும் அஜீரணக் கூட்டம் ஒருபுறம் முப்பது ஆண்டுகளாகியும் இந்த விபரீத ஏற்றத்தாழ்வு தீரவில்லை. - -

இதற்கு யார் காரணம்? எலும்புக் கூடுகளுக்கு மத்தியிலே மாமிச மலைகள் போல் வாழும் நம்மில் ஒரு சிலர்தான் காரணம், “அந்தக் கயவர்கள் ஒரு சிலர் தானே.” என்று அலட்சியமாக இருக்கக் கூடாது. உலகத்தைக் கெடுக்க ஒரு ஹிட்லர் போதும், என்பதை நாம் அனுபவத் தில் பார்த்தோம். நல்ல உடம்பைச் சூறையாட ஒரு சிறு கூடிய நோய்க் கிருமி போதும், ஆகவே. கெட்டது எவ்வளவு சிறிதானாலும் அதை உடனே ஒழித்துக்கட்டினால் ஒழிய, நாம் செய்யும் தன்மைகள் யாவும் பயனற்றுப் போய்விடும். ரத்தத்திலே இருக்கும் நோயை நீக்காமல், பட்டுச் சட்டை களினால் உடலை அலங்காரம் செய்வதனால் பயனில்லை. பட்டமரங்களுக்கு மத்தியிலே ஒரு பச்சை மரம் நெடுநாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/56&oldid=537616" இலிருந்து மீள்விக்கப்பட்டது