பக்கம்:இந்தியா எங்கே.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 5了

விடுதலையின் சின்னமான ஒட்டுரிமையை விலைக்கு வாங்கும் வில்லர்களின் தேர்தலில் நேதாஜி வந்து போட்டி போட முடியுமா? போட்டி போட்டால் நேதாஜியின் டெபாசிட் பறிபோய்விடும். நாம் அவ்வளவு தேர்தல் ஞானி களாகி விட்டோம். பகத்சிங்கே வந்தாலும் தோல்விதான் அடைவான்! மகாகவி பாரதி தேசபக்தர் சிதம்பரனார், சிவா - வாஞ்சி - குமரன். சத்தியமூர்த்தி இவர்கள் எல்லாம் இன்றைய தேர்தலில் நின்று ஜெயிக்கவே முடியாது. ஜாதிபலம் - பணவலிமை பொய் பித்தலாட்டம், மக்களின் பலவீனம் இவற்றில் நம்பிக்கையுள்ளவர் தாம் தேர்தலில் நிற்கலாம், ஜெயிக்கலாம். தியாகம் - உண்மை - நேர்மை - சேவை இவைகளுக்கு தேர்தலில் கிடைப்பது படுதோல்வி

தான்!

இப்படியாக வீரர்கள் உயிர் தந்து பெற்ற விடுதலையின் பரிசாக விளங்கும், ஒட்டுரிமையை கேவலம் பத்து ரூபாய்க்கும் ஒரு சாராயபாட்டிலுக்கும், ஒருவேளை சோற்றுக்கும் விற்று விட்டு, வீதியிலே ஏங்கி நிற்கும் இந்நாட்டு ஏழை மக்களின் வறுமையைப் பயன்படுத்திக் கொண்டு, நூற்றுக்கு 25 ஒட்டுக்களைப் பெற்று, மக்களின் மாபெரும் தலைவன் என்று ஊர்வலம் வரும், வெட்கங் கெட்ட தேசத்துரோகிகளை இனியும் நம் சின்னத்தம்பி சகித்துக் கொண்டிருக்க மாட்டான். இத்தகைய தேர்தல் நரிகளையும், பதவிப் புலிகளையும் வெகு விரைவில் நமது இளைய தலைமுறை பழிவாக கங்கணம் கட்டிக் கொண்டது.

ஒட்டை விலைக்கு வாங்கும் கள்ளச் சந்தையாகி விட்டது தேர்தல்களம். இந்தச் சந்தையிலே பணத்தை வாரி இறைத்து வெற்றிபெறும் ஜனநாயகக் கொலையாளிகளான, பண நாயர்களின் நாடகத்துக்கு இனியும் பணம் கொடுத்து டிக்கட் வாங்க மாட்டான் நம் சின்னத் தம்பி பன. நாடகத்தில் கிழவிகள் போடும் குமரி வேடங்களின் நிர்வாணக் காட்சியைப் பார்த்துப் பார்த்து சலித்து விட்டான் நம் நாட்டு இளைஞன் - இனி அவன் சும்மா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/59&oldid=537619" இலிருந்து மீள்விக்கப்பட்டது