பக்கம்:இந்தியா எங்கே.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 - இந்தியா எங்கே?

இருக்க மாட்டான். ஆம்! அவனுக்கு திரைமறைவின் மர்மம் தெரிந்து விட்டது!

விடுதலையின் விலை பத்து ரூபாய்க்கு ஒட்டை விற்கும் தேர்தல் நாடகம் அல்ல; வெறும் வாய்ஜால மேடை வாக்குறுதிகள் அல்ல; பொய்யர்களின் போலிப் பொம்மலாட்டம் அல்ல; கண்களை இமை காப்பது போல் காக்கப்பட வேண்டிய வீரச்செல்வம் நமது விடுதலை! இதை இளைய சமுதாயம் உணர்ந்து கொண்டது. இந்தக் கடமை உணர்வினால், என் சின்னத் தம்பியின் முகம் செக்கச் சிவந்த செந்தாமரை போல் விளங்குகிறது. இந்திய ஞான சூரியனை இனி பதவி வெளவால்களும், ஜாதிக் கோட்டான் களும், பணப் பேய்களும், கவர்ச்சி வேசிகளும் மாற்ற முடியாது. விடுதலையின் விலை நமது உயிர் Eternal Vigilance is the price of Liverty. கண்ணிமையாத கண்காணிப்பு தேவை! அப்போது தான் விடுதலையை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

இந்தியா வாழ்ந்தால் நாம் அனைவரும் வாழலாம். இல்லையேல், மீண்டும் ஒருமுறை அடிமைகளாவோம். எச்சரிக்கை இனியொரு தடவை நாம் விடுதலையை விற்று அடிமைகளானால், அந்த அடிமையிருள் நரகத்திலிருந்து நம்மை மீட்க மற்றொரு மகாத்மா வரமாட்டார். மற்றொரு திலகர் வரமாட்டார். மற்றொரு சிதம்பரம் வரமாட்டார். மற்றொரு பகத்சிங் - நேதாஜி, ஜெய்ஹிந்த் மந்திரத்தின் தந்தை - புர்ட்சி வீரர் டாக்டர் செண்பகராமன், திருப்பூர் குமரன், சிவா பாரதி - தாகூர் முதலியவர்கள் வர மாட்டார்கள். எச்சரிக்கை விரைவில் ஒரு முடி வெடுப்போம்! நமக்கு வேண்டுவது என்ன? தேசமா? தேர்தலா? கட்சியா? காரியமா? அரசியலா, ஆற்றலா? போலியா, உண்மையா? நடிப்பா, நடப்பா? உண்மையா, பொய்மையா? வாழ்வா, தாழ்வா? இதில் நல்லது தேவை எனில் இந்தியாவில் இந்தியா இருந்தாக வேண்டும்!

ஜெய் ஹிந்த்! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/60&oldid=537621" இலிருந்து மீள்விக்கப்பட்டது