பக்கம்:இந்தியா எங்கே.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮾ2

இந்தியா எங்கே?

வீட்டைக் கொளுத்திக் குளிர்காய்ந்தால் - நாளை வெயிலுக்கு யார்நிழல் தந்திடுவார்?

கோடி உயிர்தந்து கொண்ட விடுதலை கோணங்கி நாடகம் ஆடுதற்கா?

வாடும்பயிர் எனஆடும் விடுதலை

வல்லமை பெற்று விளங்கிடுமா?

ஐந்தாண்டு திட்டத்தில்லாபம் என்றோம் - அந்த

லாபம் புகுந்தத யார்வயிற்றில்?

வந்தபலன் எல்லாம் எங்கே தொலைஞ்சுது

வல்லவரே அதைச் சொல்லுங்களேன்!

எந்தவொரு மொழிஆதிக்கம் இன்றியே

இந்தியர் ஒன்றாகத்தானிருக்கோம் இன்று

விந்தைமொழிப் பிடிவாதத்தினால் பல

வீம்புகள் வந்தது யாராலே?

ஊருக்கு உபதேசம் செய்திடுவார் - அவர்

உள்ளுக்குள்ளே பழிவாங்கிடுவார்

யாருக்குமே தெரி யாதென எண்ணியே

ஆளுக்கு ஆள்குழி தோண்டுகிறார்.

வெள்ளைத் துரைக்குப் பதிலாக இங்குக்

கள்ளக்கருப்புத் துரைத்தனமா?

கொள்ளை - கொலைகள் குறைந்ததுவா? குற்றங்கள் வஞ்சனை தீர்ந்ததுவா?

வழிகாட்ட வேண்டிய மூத்தவர்கள்

கைகாட்டி மரமாக நிற்பதுவா?

பழிகாட்டும் வழியிலே ஒடுவதா இந்த

பாரதநாடுபா ழாவதுவா? " -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/64&oldid=537625" இலிருந்து மீள்விக்கப்பட்டது