பக்கம்:இந்தியா எங்கே.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

இந்தியா எங்கே

பின்னல் சிலந்திகள் கட்சிவலையில் ஓர்

பின்புத்திப் பூச்சியாய் மாட்டுவதா?

பெண்டாட்டி சேலையை வித்துப்புட்டே

பேசும்படத்துக்குப் போவதுவா?

திண்டாட்டத்தில் நாடு ஆடையிலே - இங்கு தேர்தல்

தெருக்கூத்து ஆடுவதா?

கன்னிஎனச் சொல்லி கர்ப்பத்தடைசெஞ்சி

கிழவிகள் கண்ணகி ஆவதுவா?

என்னென்னவோவழி தன்னில் பணம்பண்ணும்

ஈனர்கள் நம்மை ஆள்வதுவா?

- ஏன்னுகேட்டா தேர்தல் நிதி இன்னு

ஏமாத்து வித்தைகள் செய்வதுவா? இன்னும் ஒருதரம் கேட்டுப்புட்டாஆளை

இல்லாமலே கொலை செய்வதுவா?

பேனாபிடிக்கும்பே ராசிரியன் அவன்

பிராந்தி வியாபாரம் பண்ணுவதாஉதவி

மானாபி மானத்தை விற்பதுவா? அதில்

மாளிகை மண்டபம் கட்டுவதா?

பெண்ணைக் கெடுத்திட வண்ணக்கதை சொல்லும்

மண்ணாகும் புத்தகம் பத்திரிகை

மின்னிடும் மஞ்சள் மோகினியைப் போல - அது திண்ணை தோறும்விலை போவதுவா?

காந்திப் படத்தையும் போடுகிறான் - அரள்

காஞ்சி முனியையும் கும்பிடுவான்

சாந்தியின் வேதங்கள் ஒதும் கயவர்கள்

சர்வ கொலைகளைப் பண்ணுவதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/66&oldid=537627" இலிருந்து மீள்விக்கப்பட்டது