பக்கம்:இந்தியா எங்கே.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

நம் தாய்

காலம் - 1

இடம் : மலைச்சாரல்

காலம் பின்மாலை அந்திப் பொழுது

(சிந்தனைக்குத் துய்மை தரும் சிறப்பான சோலைகள். பார்த்ததுமே பசி தீர்க்கும் கனிகள் தரும் தோப்புகள். எழுந்துவரும் ஒலிகளையெல்லாம் எதிரொலிக்கும் குன்றின் சுவர்கள். வானளக்கும் பெரு மலைகள். முகில் தூங்கும் சிகரங்கள். அருவிகள் பாயும் சாரல்கள். ஆங்காங்கே சிறு குகைகள். அம் மலையின் ஒரத்தில் ஆற்றோரக் கரையழகு. அங்கெல்லாம்

கல்மேடை சாந்தி மலர்ச் சோலைகள். சீரான இளந் தென்றல்

தலையாட்டும் பெரு மரங்கள். இங்குதான் நமது நாடகத் தலைவனையும், தலைவியையும் சந்திக்கிறோம். அவன் பெயர் வானழகன். அவள் பெயர் வேல்விழி. அவனே அவள். அவளே அவன். இருவரும் உயிரும் காற்றுமாகி நெடுநாட்கள் ஒடி விட்டன. இவர்களின் இன்ப வாழ்வின் அன்புச் செவிலிபோல் விளங்கியது அக்கானகம். இவர்களது பாசவலையில் அகப்பட்ட அன்புப்பறவையைக் கூட்டில் வைத்து வளர்க்கவில்லை. அப்பறவை இவர்களை விட்டுப் பிரியாமல், குழந்தையாக வளர்கிறது. இவர்கள் இலட்சியம் இந்த இன்பத்தோடு நிறைவு பட்டதாகத் தெரியவில்லை. இதனையும் தாண்டியதொரு குறிக்கோள் இவர்களை எதிர்நோக்கிக் கூவிக்கொண்டே இருக்கிறது. அதையடைய வெகுதுரரப் பிரயாணம் செய்ய வேண்டிய நெருக்கடியும் அவர்களுக்கு உண்டு. அந்த ஆபத்தான பயணத்தில் குறுக்கிடும் பல மிருகங்களை வேட்டையிடவே

مسہ۔

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/70&oldid=537631" இலிருந்து மீள்விக்கப்பட்டது