பக்கம்:இந்தியா எங்கே.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் o - 69

வில்வித்தையைத் தன் துணைவிக்கும் கற்றுத் தருகிறான் வானழகன். உடல் களைப்புத்திர கீழ்க்காணும் உணர்ச்சிமிக்க வழிநடைப் பாடலையும் பாடி விளையாடுகின்றனர். அவன் வேடன் போல் சிறுத்தைத் தோலணியை ஆடையாகக் கொண்டுள்ளான். அவள் அதே தோலாலான போர்வீரன் முழுஉடுப்பை, தனது மெல்லிய மேனி உறுத்தலையும் பொருட் படுத்தாது போட்டுக்கொண்டு, பாட்டுடன் போர்க்கலைப் \ 'பயிற்சியும் பெறுகிற்ாள். அவளது குமுதச் செவ்வாய் பண்தேன் கொட்டுகிறது. குறுகுறுத்த விழிகள், அம்பின் பின் சிறகின் வழியாக தூரக்குறி நோக்கிப் பாய்கின்றன. அவள் வளைக்கும் வில்லும், மேனியும், ஒன்றையொன்று போட்டியிட்டன. மலர்க்கரம் துவண்டது. ஆனால், அவள் மனம் அப்படியல்ல. அவனது வெங்கலக்கைகள், அவள் கரங்களைப் பிடித்துப் போர்ப்பயிற்சி தரும் போதெல்லாம் ஏற்படும் துன்பமெல்லாம் இன்பமாகவே மாறித் துணிவைத் தந்தது. அவனும் குன்றின் குகையெல்லாம் எதிரொலிக்கப் பாடுகிறான்-) -

நம்தாய் நம்தாய் நம்தாய் எந்தன் அன்னைதந்தை வாழ்ந்தசொந்தமானநாடே வந்தநண்பர் பசியைநீக்கும் பந்தமானவிடே சிந்தையெங்கும் சீர்மைதந்த விந்தையானமாதா எந்தநாளும் நமது தெய்வம் இந்ததேசத்தாய்தான் நம்தாய் நம்தாய் நம்தாய்

குன்றின் குகையிலிருந்து வந்த எதிரொலியைக் لجهو

கேட்டு வியந்து) வேல் : கேட்டீர்களா எதிரொலியை குன்றும், கூடப்

பாடுகிறதே! - -

வான் ; வேல்விழி! உன் வீர ஒலியைக் கேட்ட குன்று உயிர்பெற்றுப் பாடுவதில் வியப்பொன்று மில்லையே.

வேல் : எதிரொலி சுருதி சுத்தமாக வல்லவா கேட்கிறது. வான் : எங்கே பாடு. வேல் : நம் தாய் நம் தாய் நம் தாய் (பாடல்)

எதிரொலி : நம் தாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/71&oldid=537632" இலிருந்து மீள்விக்கப்பட்டது