பக்கம்:இந்தியா எங்கே.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 71

வான்

வான்

வேல்

வேல்

வான்

(இரண்டு வாட்களைப் பாறையின் மறைவி விருத்து எடுத்துவந்து அவனிடம் ஒன்றைத் தந்து - உம். எதிர்த்து நில்லுங்கள் பார்க்கலாம். (சண்டையிட்டுத் திறமையைக் காட்ட/ சபாஷ்! வேல்விழி இன்றோடு என் கவலை ஒழிந்தது. எதிர்க்கவரும் குண்டர்கள் இன்றே வீழ்ந்து விட்டார்கள். உண்மையிலேயே நீ வாட் போரில் நல்ல பயிற்சி பெற்றுவிட்டாய். கண்ணே, நான் இவ்வளவு திறமையை எதிர் பார்க்கவே யில்லை. -

உண்மையாகத்தான் சொல்லுகிறீர்களா? ஆம் கண்ணே. தற்காப்புக்கேற்ற பயிற்சியைப் பூரணமாகப் பெற்றிருக்கிறாய். ஒவ்வொரு பெண்ணுக்கும் இவ்வளவு சக்தியிருந்தால் போதுமே எளிதில் பேயர்களின் கொட்டத்தை பொய்யாக்கி விடலாம்.

உண்மையில் நாம் நமது இலட்சியத்தை அடைய முடியுமா? எண்ணில்லாத சூழ்ச்சியும் பக்க பலமும் உள்ள பனித்தீவின் சந்ததியே

பூண்டற்றுப் போகச் செய்ய முடியுமா?

வேல்விழி மிகச் சாதாரண பெண்களுக்குரிய இந்த சலிப்பும் சந்தேகமும் உன் வாழ்க்கை யில் குறுக்கிடுவதை நான் விரும்பவில்லை. பெண்மைக்குரிய ஆற்றலைப் பொலிவாக்கி வளர்ப்பதே உன் கடமை. நீ மகாசக்தியின் வல்லமை கொண்ட வீரமணி. உனக்கு உரிமை யான மனவன்மையை நீயே தாழ்த்திக் கொள்ளாதே. தன்னம்பிக்கையில் தளர்வின்றி துணிவோடு நில் அஞ்சி நடுங்காதே.

நடுங்கவில்லை. எதிரிகளின் விலங்குத்தனமான

படை வலிமையை எதிர்க்கத்தக்க எண்ணற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/73&oldid=537634" இலிருந்து மீள்விக்கப்பட்டது