பக்கம்:இந்தியா எங்கே.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 75

வான்

வேல்

வான்

அப்பப்ப மனிதன் மனிதனுக்கு அஞ்சி வாழும் மிருகப்பிராயத்தை மீட்கத்தான் போகிறோமா?

வேல்விழி! நமது இன்பத்தில் இந்நாட்டின் தலை விதியும் பிணைக்கப்பட்டுள்ளது. நமது ஆயுட் கால முழுவதும் வேண்டுமானாலும் இந்தக் குகை யிலேயே வாழ்ந்துவிட வசதி செய்ய என்னால் முடியும். ஆனால் நம்போன்றே இன்ப வனத்தில், அன்புவானில் மிதந்து இனிக்க வேண்டிய லட்சக் கணக்கான இளங்காதலர்கள் கூண்டுப் பறவை போல் பனித்தீவின் அடிமைச் சந்தையிலே விலை கூறி விற்கப்பட்ட விலங்குகளாகி விட்டதை எண்ணும்போது, நமது இன்பக் கனவெல்லாம் சிதறிப் போகின்றதே, நானென்ன செய்வேன்? நமக்குத் தோன்றப் போகும் சந்ததிகளும் இப்படியே குகை வாழ்விலேயே வாழ்ந்து, கானகத்து மனிதர்களாக வேண்டியதுதானா?, இவைகளை உத்தேசித்தே நான் பயங்கரமான எதிரியை வீழ்த்த என் கருத்தை உருப்படுத்து கிறேன். இந்தப் பெருந்துணிவில்லா விட்டால் நான் உனது செளந்தரிய ஒளியைவிட்டு ஒரு கணங்கூடப் பிரிந்திருக்க மாட்டேன் கண்ணே, நமத இன்பப் பசியைப்போலவே எண்ணற்றவரை வாட்டும் இதயப் பசிக்கும் பரிகாரத்தை அதி விரைவில் தேடிவிடுகிறேன். வேல்விழி.

விரைவில் விரதம் முடியட்டும். தணியாத தாகம் அது ஒரு அணையாத பெருநெருப்பு. பற்றி எரிகிறது. நாமா தீ வைத்தோம்? பருவக் காற்றால் ஆன பாசவலையில் மீளவழியின்றி தவிக்கின் றோம். இதன் பொறுப்பை, யார் மீதும் சுமத்து வதற்கில்லையே! இயற்கைச் சக்தியின் இன்ப விளையாட்டு. -

வேல்விழி இப்படி அருகில் வா. அமரு. சாந்தங் கொள். எங்கே உனது உன்னதமான துணிவு?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/77&oldid=537639" இலிருந்து மீள்விக்கப்பட்டது