பக்கம்:இந்தியா எங்கே.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

இந்தியா எங்கே?


“பெரும்பான்மை மக்கள் ஒன்றுபட்டு, குரல் எழுப்பாதி ருப்பதால். அவர்களது நியாயமான தேவைகளைப் புறக்கணிக்கலாமா? என்று கேட்கிறார்.

வரும் தேர்தலில், மக்கள் தேர்ந்தெடுக்கப் போவது யாரை? தங்கள் ஊழியர்களையா? எஜமானர்களையா?” என்று கேட்கிறார். -

இந்த உணர்ச்சி இன்றைய தேர்தல் மேதைகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும். கட்சிக் காளைகளுக்கும் வந்தால் நல்லது. - . -

ஜனாதிபதி அவர்கள், மக்களுக்கு விடுத்துள்ள இந்த துணிச்சல் மிக்க உரையை ரேடியோவில் கேட்கும் போது, மகாகவி பாரதியாரின் கவிதைதான் மீண்டும் நம் நினைவுக்கு வருகிறது. மீண்டும் என்ன? நமது பயம் தீரும்வரை ஆயிரம் ஆயிரம் முறை இந்த மந்திரப்பாட்டை உருப்போட்டு மனம் மாற வேண்டும்! -

"தந்த பொருளைக் கொண்டே - ஜனம் தாங்குவர் உலகினில் அரசரெல்லாம்! அந்த அரசியலை - இவர் அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சமயர்வார்!"

என்று அன்று-அடிமை நாட்டில் நமது மக்கள் கொண்டிருந்த அச்சத்தைப் போக்க வேண்டி மகாகவி பாடினார்.

இன்று நமது மக்களின் தலைவன் சஞ்சீவி ரெட்டியும் அதே பொருள் தொனிக்கும் துணிச்சல் உரையை மக்களுக்குக் குடியரசு தினச் செய்தியாக வழங்கியமைக்கு அவரை நன்றியுடன் பாராட்டுகின்றோம்.

இனியும் மக்கள் அரசியல்வாதிகளை எஜமானர்கள் என்று எண்ணிப் பயப்பட்டுச் சாகவேண்டாம். நாம் தரும் வரிப் பணத்தில் தேர்தல் செலவு செய்யப்படுகிறது. பார்லிமெண்டுகள், அசெம்பிளிகள், பஞ்சாயத்துக்கள், முனிசி பாலிடிகள் நடத்தப் பெறுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/8&oldid=982968" இலிருந்து மீள்விக்கப்பட்டது