பக்கம்:இந்தியா எங்கே.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

வேல்

வாணி :

வேல்

வாணி :

வேல்

வாணி :

வேல்

நம் தாய்

முடியாத தெய்வீகம் என்பார்களே! எல்லாம் சொல்லழகின் பின்னால் தானோ? சூன்யக் காட்டிலே, குழப்ப இருட்டிலே, சுற்றி மடியவா பெண்ணாய்ப் பிறந்தேன்? - அம்மா! என்னம்மா எனக்கு தைரியம் கூறும் நீங்கள் இப்படி எந்நேரமும் தேம்பிக் கொண்டி ருக்கிறீர்களே? தாங்களே கண்ணிர் வடித்தால் நானென்ன செய்வது? கண்ணே நீ வந்து விட்டாயா? ஒன்றுமில்லை அம்மா! உங்கள் வருங்கால வாழ்க்கையைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தேன். என்னையும் அறியாமல் கண்ணிர் வருகின்றது. தாயே! தங்கள் அன்பும் ஆசியும் என்னையும் வானழகரையும் கட்டாயம் இன்ப உலகில் இணைத்து விடும் என்பதற்குச் சந்தேகமே இல்லையம்மா. - ஆனால் வானழகனின் வீர வாழ்வு உனக்கு மாத்திரம் ஒதுக்கப்படாமல் உலகெங்கும் கவிழ்ந்து மூடிக் கொண்டிருப்பதை எண்ணும் போது தானம்மா என்னையுமறியாமல் துயரம் மூளுகிறது. - அம்மா! அவர் அன்பின் அகண்ட சக்தி எனக்காக மாத்திரம் தேங்கி, என்னிடத்திலேயே நிலைத்து விட்டால், நிலையற்றுத் தவிக்கும் உலக நிலையின் பேய் நடனத்தை அழிக்க வேறு யாரம்மா இருக்கிறார்கள்? உலகத் தாய். அபலைத் தாயாகி விடுவாளே. உங்கள் துணிவைக் கண்டு தானம்மா என் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அம்மா சென்றதை மீண்டும் பெற முடியாது. வருங்காலத்தின் நிகழ்ச்சிக்கு வேலியிடவும் முடியாது. இன்று வானழகர் செய்து வரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/84&oldid=537646" இலிருந்து மீள்விக்கப்பட்டது