பக்கம்:இந்தியா எங்கே.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 85

பூரிக்கிறான் - தன்னை மறந்து பிதற்றுகிறான். இவ்வளவு செல்வமும் போய் விட்டால் என்ன ஆகுமென்ற பாட்டின் அடி வரும் போது பதைக்கிறான்)

பொன் :

அசரீரி : .

பொன் :

|

(தனக்குள்/ ஆ என் தங்கம் என்னை விட்டு அகலாது. நான் சம்பாதித்தது. என் சொந்தமான சொத்து. பனித்தீவின் பிரபுக்களிடம் வியாபாரம் செய்தேன். வந்தது பணம் அமித லாபம்!

மனிதா! உனக்குச் சொந்தமானது உலகில் எதுவுமில்லையே. உன் ஆட்டத்துக்கெல்லாம் சூத்திரக் கயிறாய் ஆடும் உனது உயிரே ஒரு

நாளைக்கு உடம்பை விட்டு எங்கோ மறைந்து

போகுமேடா. அதை எண்ணிப் பார். வீண் பொன்னாசை தொலைந்து விடும்.

சே. என்ன நினைவு இது. எனது பராக்ரமம் பொருந்திய மலைகிள்ளு மாயனைக் கூப்பிட்டால் கொஞ்சம் ஆறுதலாயிருக்கும். சே. அவன் என் அந்தரங்க அறைக்கு வருவதா? அதுவும் ஆபத்து - பொன் கோடிக் கணக்கான, தங்க நாணயங்கள் - இன்னும் கொஞ்சம் அடிமை களின் விலையை ஏற்றி விட்டால், தங்கக் கட்டிகளையே செங்கல்லாக உபயோகித்து கனகச் சுவரெழுப்பி, நவமணி மாளிகையிலே நாயகனாய் வீற்றிருப்பேன். ஆம் ஆம் தங்கம். அஹ்ஹஹ.

அடா பேராசைப் பேயே! தங்க மாளிகையா வேண்டும்? எங்கு கட்டப் போகிறாய்? வெள்ளி மலையின் மீதா? மடையனே இயற்கைத் தாய், சீறியெழுந்து சிரிக்கும் போது உண்டாகும். ஒரு நிமிஷ பூகம்பத்திலே பெருகும் நாச வெள்ளத் திலே, நீயும் உன் தங்கமும், மாளிகையும், உன் மூளையும், அனைத்துமே முழுகித் திணறி மூச்சற்றுப் பிரளயத் திமிங்கிலத்தின் இரையாக நேரும் போது என்னடா செய்யப் போகிறாய்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/87&oldid=537649" இலிருந்து மீள்விக்கப்பட்டது