பக்கம்:இந்தியா எங்கே.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.டி. சுந்தரம்

7



நம்மிடமிருக்கும் விலைமதிப்பற்ற வாக்குரிமையை பணிவுடன் கேட்டுப் பதவிக்குப் போகும் அவர்களைப் பொதுமக்கள் பொதுஜன ஊழியர்களாக எண்ணத் தொடங்கும் அந்தநாள்தான், இந்தியாவின் உண்மையான சுதந்திரநாள் என்பதையும் நினைவூட்டுகிறோம்.

நமது ஜனாதிபதி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு தியாகங்களைச் செய்த சிறந்த போர்வீரர் ஆந்திர மாநில முதலமைச்சராகப் பல்லாண்டு மக்களோடு பழகி அவர்களது அபிலாஷைகளை உற்றுணர்ந்தவர். மேலும், நமது ஜனாதிபதி ஒரு விவசாயி! வெறும் வாய்ஜாலம் பேசும் அரசியல் வக்கீல் அல்ல; வறட்டுக் கட்சி வாதம் பேசுபவரல்ல; இன்று மாத்திரமல்ல; அவரது உள்ளம் அன்றே நிரூபிக்கப்பட்டது.

ஆந்தி கேஸ்ரி தியாகப் பேருருவம் ஸ்ரீபிரகாசம். மகாத்மாஜி, பண்டித நேரு. பாட்டாளித் தலைவர் காமராஜ் இவர்களின்மீது. நமது ஜனாதிபதி வைத்திருந்த மரியாதையும், பெருமதிப்பும் வரலாற்றுச் சிறப்புமிக்க உண்மைகளாகும்.

கம்பீரமிக்க சஞ்சீவிரெட்டியின் குரல் என்றுமே, தமது இதயத்தின் கீதமாகவே ஒலிக்கும் பண்புடையது. உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் அரசியல் சூழ்ச்சியை என்றுமே விரும்பாதவர்.

1962-ல் அவர் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக இருந்தபோது. செய்த மகத்தான சாதனைகள் நாம் மறக்காமல் நினைவுபடுத்திக் கொள்ளத்தக்கவை! அதன்பின், பார்லிமெண்டின் நடுநிலைமைமிக்க தலைவராக வீற்றிருந்து தமது நாணயத்தை எல்லாக் கட்சிகளும் மெச்சும்படி நிலைநாட்டிய வீரர் அரசியல் வாதிக்கு. கட்சி என்பது ஒரு படியே தவிர, அதுவே கோபுரமாகி விடாது. ஆகவே, கட்சிக்கு அப்பாற்பட்டு பெரும்பான்மையான பொதுமக்களுக்குரிய நன்மைகளைப் பற்றி நினைப்பவனே. இனி இந்திய அரசியல் பொறுப்பில் இடம்பெற முடியும் என்பதைத் தமது குடியரசு தினச்செய்தியில் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார். அவருக்கு நமது நன்றி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/9&oldid=982999" இலிருந்து மீள்விக்கப்பட்டது