பக்கம்:இந்தியா எங்கே.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 97

வேல்

வான்

வேல்

வான்

போங்களம்மா. இதோ வந்து விட்டேன். (வாணி செல்கிறாள்)

வேல்விழி! என்னை இந்தக் கோலத்தில் பார்தததும் உன் தாயின் துயரம் அதிகமாகி விட்டது. இல்லையா? நம்மேல் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள். ஆகா வேல்விழி! என்ன இருந்தாலும் தாயின் அன்பைப்போன்ற ஒரு தூய்மையான பொருள் உலகில் வேறு எதுவுமே இல்லை கண்ணே.

ஆம். அதற்குச் சந்தேகமென்ன? எங்கள் பெண் குலத்தின் சீவ அணுக்கள் ஒவ்வொன்றும்

தாயன்பைத் தன்னல ஆண்களுக்குக் கற்பிக்கும்

குரு பீடம், தெரியுமா? சரி. வாருங்கள் பசிக்குது என்று பரிதவித்தீர்களே!

வருகிறேன்.

(குகைக்குள்ளே/

(வாணியம்மையின் நினைவு பேசுகிறது) பேதமை ஆகா! இவ்வளவு தூய்மையான அன்புத் தெய்வங்களிடம் எனது வாழ்வின் இரகசியத்தைச் சொல்லாமல் மறைத்து வைப்பது எவ்வளவு பாதகம்! அவசியம் இன்று சொல்லி என்

இதயப் போராட்டத்திற்கு ஒரு ஓய்வைக் கொடுக்காவிடில், அது என்னை மாய்த்துவிடும்.

வைராக்யம் : பின்புத்தியுள்ள பெண்ணே! உன் பேதமையின்

பலவீனத்தால் இப்படி எண்ணுகியாயே வாணித் தாயே! ஒரே ஒரு மனத்தில் மாத்திரம் நகராமல் இடம்பெற்ற நினைவுக்குத்தான் இரகசியம் என்று பெயர். யாராயிருப்பினும் சரி, அறிந்த மறு நிமிடமே அது எங்கும் பரவி பெரிய விபரீதத்தை விளைவித்து விடும். உனது உள்ளத்தின் மூலை யில் தூங்கும் இரகசியம் சாதாரணமானதல்ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/99&oldid=537661" இலிருந்து மீள்விக்கப்பட்டது